தாயார் இராஜேஸ்வரி உட்பட 4 பிள்ளைகளுக்கு பார்வை குறைவு! வறுமைப் பிடியில் முருகன் குடும்பம்!

0

பந்திங், மோரிப்பில் ஆறு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வாசித்து வரும் முருகன் அந்தோணி என்பவரின் குடும்பம் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறது.
பந்திங், மோரிப் கம்போங் தொங்காவில் சீனருக்குச் சொந்தமான வீட்டில் முருகன் அந்தோணி ( வயது 30) தன் மனைவி மற்றும் 6 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
லோரி உதவியாளராக வேலை பார்த்து வந்த இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் சிக்கி படுகாயமுற்றார். இதனால் இவரால் வேகமாக நடக்க முடியாது. நடக்கும் சக்தி குறைவாக இருப்பதால் இவரால் எந்த வேலையையும் செய்ய முடியாது. இவரின் மனைவி இராஜேஸ்வரி சுப்பிரமணியம் (வயது 31) . இவருக்கு 90 விழுக்காடு பார்வை குறைவு.
சமூகநல இலாகா மாதந்தோறும் இவருக்கு 250 வெள்ளி வழங்கி வருகிறது.
முருகன் அந்தோணி – இராஜேஸ்வரி தம்பதிக்கு 6 பிள்ளைகள். இதில் மூத்தவரான தினேஷ்குமார் (வயது 14) ஓர் அங்கவீனர் ஆவார். பந்திங் கில் உள்ள பேறு குறைந்தோர் பள்ளியில் படிக்கிறார். இவருக்கும் பார்வை குறைவாகும். மாதந்தோறும் இவருக்கு சமூகநல இலாகா 130 வெள்ளி வழங்கி வருகிறது.
2ஆவது பிள்ளையான ராதா ( வயது 8) பந்திங்கில் உள்ள தமிழ்ப்பள்ளி யில் படித்து வருகிறார். இவர் நலமுடன் உள்ளார்.
3ஆவது பிள்ளையான சிவசங்கரி (வயது 6) என்பவரும் பார்வை குறைந்தவர். 4ஆவது பிள்ளையான ரவிகுமார் (வயது 5) கண்பார்வை குறைவால் அவதிப்படுகிறார். இவர்களுக்கும் மாதந்தோறும் 130 வெள்ளியை சமூகநல இலாகா வழங் குகிறது. 2 வயது நிரம்பிய 5ஆவது பிள்ளையான தனுஷ்குமார் நலமுடன் உள்ளார். 5 மாத கைக்குழந்தையான துர்க்காதேவிக்கும் கண்பார்வை குறையாகும்.
ஆக ஒரே குடும்பத்தில் தாய் இராஜேஸ்வரி, பிள்ளைகள் தினேஷ்குமார், சிவசங்கரி, ரவிகுமார், துர்க்காதேவி ஆகியோர் கண் பார்வை குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மாதந்தோறும் சமூகநல இலாகா வழங்கும் உதவி நிதியால் முருகன் அந்தோணி குடும்பம் வறுமைப் பிடியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பி டத்தக்கது.
பந்திங், மோரிப்பில் ஓர் இந்தியர் குடும்பம் மிகவும் கஷ்டப்படும் செய்தியைக் கேள்வியுற்ற ஜெயம் நம்நாடு இயக்கம் கடந்த வார இறுதியில் முருகன் வீட்டிற்கு நேரடியாகச் சென்று உதவிக்கரம் நீட்டியுள்ளது. ஜெயம் நம்நாடு இயக்கத்தின் தலைவர் டாக்டர் குமரேந்திரன் இதுபற்றி தமிழ் மலரிடம் கூறுகையில், முருகன் குடும்பம் மிகவும் வறுமைக் கோட்டில் இருக்கிறது என்றார்.
சீனருக்குச் சொந்தமான பலகை வீட்டில் மாதந்தோறும் 200 வெள்ளிக்கு இவர்கள் வடகைக்கு இருக்கிறார்கள்.
இரண்டு மாதத்திற்கான 400 வெள்ளி வாடகைப் பணத்தை ஜெயம் நம்நாடு இயக்கம் செலுத்தியது.
மேலும் தண்ணீர்க் கட்டண பாக்கி வெ. 600 நாங்களே செலுத்தினோம்.
பாக்கி கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் இந்த வீட்டிற்கான
குடிநீர் விநியோகம் துண்டிக்கப்படும்.
அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக 600 வெள்ளி தண்ணீர்க் கட்டணத்தையும் நாங்களே செலுத்தினோம்.
மேலும், முருகன் குடும்பத்திற்கு 3 மாதங்களுக்கு தேவையான அரசி, சீனி, பருப்பு உட்பட அத்தியாவசியப் பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ளோம். மேலும், பார்வை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தாயார் மற்றும் பிள்ளைகளுக்கு சத்துணவு பால் மாவு உட்பட உணவு வகைகளையும் வாங்கி
கொடுத்துள்ளோம் என்று டாக்டர் குமரேந்திரன் குறிப்பிட்டார்.
கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் வகையில் ஜெயம் நம்நாடு இயக்கத்தை ஆரம்பித்துள்ளோம். கோவிட் -19 தாக்கத்தின்
போது 300க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு உதவி புரிந்துள்ளோம்.
அந்த வகையில் இப்போது முருகன் அந்தோணி
குடும்பத்திற்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளோம்.
கஷ்டப்படும்
முருகன் குடும்பத்திற்கு உதவ விரும்பும் நல்லுள்ளங்கள் 011- 12341818 என்ற
எண்ணில் தம்முடன் தொடர்பு கொள்ளலாம் என்று டாக்டர் குமரேந்திரன் கேட்டுக்
கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 7 =