தாமான் துன் சம்பந்தனில் துப்புரவு பணி

டிங்கி, சிக்குன்குனியா நோய் மக்களிடையே தற்பொழுது அதிகமாகி வரும் வேளையில் அந்நோயை தடுக்கும் முயற்சியாக கோலகங்சார் நகராண்மைக்கழக உறுப்பினர், நெருஜி முனியாண்டி தாமான் துன் சம்பந்தனில் துப்புரவு பணியை செய்துள்ளார்.
கோலகங்சார் சுகாதார துறை அலுவலகம், கோம்பி டி.டி.எஸ், கே.ஆர்.டி. டி.டி.எஸ், ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் சுகுமாரன், சுங்கை சிப்புட் ம.இ.கா மகளிர் அணி, ஆகியோர் ஒன்றிணைந்து இப்பணியை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் வீடு வீடாகச் சென்று சுகாதார துறையின் விழிப்புணர்வு அறிக்கைகள் வழங்கப்பட்டன. தாமான் துன் சம்பந்தனில் இருக்கும் காடுகள் அப்புறப்படுத்தப்பட்டன.
இதனிடையே, டிங்கி, சிக்குன்குனியா நோய் கொசுக்களினால் வருவதால், சுற்றுப்புறங்களில் கொசுக்கள் வரமால் பார்த்துக் கொள்ள வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் இந்நோய்களை தடுக்க முடியும் என்று நெருஜி முனியாண்டி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × two =