தாமான் கெலாடி தமிழ்ப்பள்ளிக்கு முன்னாள் கல்வி துணையமைச்சர் சிறப்பு வருகை

0


சுமார் 18 மில்லியனுக்கு கூடுதலான செலவில் புதிய நவீனமான நான்கு மாடிகளைக் கொண்டு கட்டப்பட்ட சுங்கை பட்டாணி தாமான் கெலாடி தமிழ்ப்பள்ளியை முன்னாள் கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் பார்வையிட்டார்.
தனது காலத்தில் இந்த பள்ளியின் உருவாக்கத்துக்கும் அதனை கட்டி முடிக்க முன்னாள் பிரதமர் நஜிப் வழி மானியங்களைப் பெற்றுத் தந்தார் என்றும் கமலநாதன் கூறினார்.
இந்த பள்ளியை இங்கு கட்ட வேண்டும் என்பதற்கு கெடா மாநில மஇகா முன்னாள் தலைவர் அமரர் டத்தோ சரவணன், சுங்கைபட்டாணி தொகுதி டிஎச் சுப்ரா, வட்டார மக்கள், தாமான் கெலாடி மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் ஜெகதீசன் ஆகியோர் வற்றாத ஆதரவை வழங்கியுள்ளனர்.
மலேசிய வரலாற்றில் ஒரு புதிய சரித்திரம் கொண்ட தமிழ்ப்பள்ளியாக இப்பள்ளி விளங்கும் என்பதுடன் மிக விரைவில் திறப்பு விழா காணும் இப்பள்ளிக்கு உங்கள் பிள்ளைகளைப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று சுற்றுவட்டார மக்களிடம் கமலநாதன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 18 =