தாசேக் குளுகோரில் முனீஸ்வரர் ஆலயத்தை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து நாசம்

இங்கு தாசேக் குளுகோர்,ஹொக் எங் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் அடையாளம் தெரியாத நபர்களால் உடைபட் டதைத் தொடர்ந்து, பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. இராமசாமி நேரில் சென்று பார்வையிட்டார். இந்த ஆலயத்திற்கு வெளிப்புறம் இருந்த சங்கிலி கருப்பன் சிலையின் ஒரு பகுதியை நபர்கள் உடைத்துள்ளனர்.
இந்த ஆலயம் உடைபட்ட விவகாரம் தொடர்பாக ஆலயத்தின் தலைவர் மனோகரன் மற்றும் சில பக்தர்களுடன் இராமசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த ஆலய உடைப்பு சம்பவம் தொடர்பாக போலீஸ் புகார் செய்யப்பட்டு, சில போலீஸ்காரர்கள் ஆலயத்திற்கு வருகை புரிந்ததாக மனோகரன் துணை முதலமைச்சரிடம் கூறினார்.
104 ஆண்டுகள பழமை வாய்ந்த இந்த ஆலயத்திற்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 3000 பேர் வழக்கமாக வருகை புரிவர் என அவர் குறிப்பிட்டார்.
ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் வருடாந்திர திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதாக மனோகரன் குறிப்பிட்டார்.
இந்த ஆலயத்தை பினாங்கு மலே சிய பதிவு இலாகாவில் பதிவு செய்ய பினாங்கு இந்து அறப்பணி வாரியம் உதவியதாக அவர் குறிப்பிட்டார். இந்த ஆலயம் உடைபட்ட சம்பவம் குறித்து போலீசார் முறையான விசாரணை மேற்கொள்வர் என இராமசாமி தெரிவித்தார். இந்த ஆலயத்திற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தன்னால் இயன்ற உதவிகளை வழங்கும் என பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × one =