தவறுதலாக கத்தியால் குத்தப்பட்ட இந்திய சிறுவன் பலி

தமது 11 வயதான மாமா மகள் வைத்திருந்த கத்தியால் தவறுத லாக குத்தப்பட்ட 7 வயது சிறுவன் ஆதித்யன் த/பெ ஜெகதீசன் இங்குள்ள தாமான் செம்பாகா, கம்போங் கோஹ் சித்தியவானில் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று இரவு 10.20 மணிக்கு சம்பந்தப் பட்ட 2 குடும்பத்தினரும் தீபாவளிக்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்துக் கொண்டி ருந்த வேளையில் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு கயிறை வெட்டும்படி தமது தாயார் கூறியதைத் தொடர்ந்து 11 வயதான சிறுமி வீட்டிற்குள் சென்று ஒரு கத்தியை கொண்டு வந்துள் ளாள். அப்போது அடுத்த வீட்டில் வசித்து வந்த அத்தை மகன் வேகமாக ஓடி வந்து கத்தியை கையில் வைத்திருந்த சிறுமியின் மீது மோதியுள்ளான்.
அப்போது கத்தி நெஞ்சிற்குள் பாய்ந்ததைத் தொடர்ந்து 7 வயதான பையன் (ஆதித்யன் த/பெ ஜெகதீசன்) உடனடியாக மரணம் அடைந்து விட்டான்.
கத்தி நெஞ்சுப் பகுதியில் ஊடுருவியதைத் தொடர்ந்து உடனடியாக ஸ்ரீ மன்ஜோங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அந்த சிறுவனை காப்பாற்ற இயல வில்லை என்று பலியான சிறுவ னின் உறவினர் கூறினார்.
சம்பவத்திற்கு சிறிது நேரத் திற்கு முன்னரே பலியான சிறுவன் ஆட்டு இறைச்சியை உண்ண விரும்புவதாக என்னிடம் தெரிவித்தான்.
நாளை தீபாவளியன்றே ஆட்டிறைச்சி சாப்பிட முடியும் என்று அவனிடம் கூறினேன். அதை சாப்பிடாமலேயே அவன் போய்விட்டான் என்று அந்த உறவினர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதற்கிடையில் மன்ஜோங் வட்டார காவல் துறை தலைவர் நோர் ஒமார் சாப்பி சம்பவத்தை உறுதிப்படுத்தினார். பலியான சிறுவனின் நல்லுடல் இன்று தகனம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 3 =