தவறான செய்தியினால் பல சிரமங்களுக்கு ஆளானேன்

0

தினசரி ஒன்றில் பிரசுரிக்கப்பட்ட தவறான செய்தியினால் தாம் பல சிரமங்களுக்கு ஆளானதாக தைப்பிங்கில் இயங்கும் ‘அபிராமி அச்சக’ உரிமையாளரான அபிராமி நேற்று கூறினார்.
கடந்த ஜூன் 10ஆம் தேதி தைப்பிங் அபிராமி அச்சகத்தின் உரிமையாளர் தூக்கில் தொங்கினார் என்ற செய்தி தமக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதோடு தமது வியாபாரமும் சரிவு கண்டுள்ளதாக அவர் சொன்னார்.
அந்தத் தவறான செய்தியைத் தொடர்ந்து அபிராமி அச்சகம் மூடுவிழா கண்டுவிட்டதாக கேள்வியுற்ற தமது வாடிக்கையா ளர்கள் பலர் மீண்டும் தமது அச்சகத்திற்கு வரவில்லை என்றார் அவர். “இதன் காரணமாக எனது வியாபாரம் பெரும் வீழ்ச்சி கண்டது. கடந்த 2012 முதல் அபிராமி அச்சகத்தை நான் வெற்றிகரமாக நடத்தி வந்தேன். ஆனால் அந்தத் தவறான செய்தி என்னை வீழ்ச்சி நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டது” என அவர் சொன்னார்.
அந்தத் தவறான செய்தி பிரசுரித்ததற்காக சம்பந்தப்பட்ட தினசரியிடம் பலமுறை முறையிட்டும் தமக்கு நியாயமான பதில் கிடைக்கவில்லை என அவர் சொன்னார்.
தமக்கு வேறு வழியில்லாததால் அந்த தினசரிக்கு எதிராக நேற்று செந்தூல் போலீஸ் நிலையத்தில் தாம் புகார் செய்ததாக அபிராமி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =