தலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை

0

காலை எழுந்தவுடன் பல் விளக்கி காலை கடன்களை முடித்துவிட்டு விரிப்பில் கிழக்கு நோக்கி அமரவும். முது கெலும்பு நேராக இருக்கவும். உங்களது இரு கை பெருவிரலினால் காதின் துவாரத்தை மூடவும். இரு கைகளின் ஆள்காட்டி விரலைகொண்டு கண்களை மூடி, மோதிரவிரல் சுண்டுவிரல்களை உதட்டிற்கு கீழ் வைத்து படத்திலுள்ளபடி இருக்கவும். காதுகளை பெருவிரலால் நன்கு மூடிக்கொள்ள வேண்டும்.

சாதாரண சுவாசத்தில் ஒரு நிமிடம் அமைதியாக இருக்கவும். பின் சாதாரணமாக கைகளை எடுத்து சற்று ஓய்வெடுத்து மீண்டும் இரு முறை இவ்வாறு செய்யவும். இவ்வாறு செய்யும் பொழுது கபாலப்பகுதி, மண்டை உட்பகுதியில் நன்கு பிராணன் இயங்கும். அந்தப் பகுதியிலுள்ள நரம்பு மண்டலம் சிறப்பாக பிராணசக்தி பெற்று, சுறுசுறுப்பாகத் திகழும்.

இரண்டாவது பயிற்சி

வஜ்ராசனத்தில் அமரவும். கைகளை சின் முத்திரையில் வைக்கவும். (ஆள்காட்டி விரல், பெருவிரல் நுனியைத் தொட்டு இலேசாக அழுத்தம் கொடுக்கவும் மற்ற மூன்று விரல்கள் சேர்ந்திருக்கவும்). கண்களை மூடவும் இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும். மூச்சை வெளிவிடும் பொழுது உடல், மனதிலுள்ள டென்ஷன், கவலை, கோபம் வெளியேறுவதாக எண்ணவும். இதேபோல் 15 முதல் 20 தடவை மூச்சை மெதுவாக இழுத்து வெளிவிடவும்.

இப்பொழுது இரு நாசிவழியாக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். முடிந்த அளவு மூச்சை அடக்கவும். கஷ்டப்பட்டு மூச்சை அடக்க வேண்டாம். எப்பொழுது மூச்சு வெளிவிட வேண்டும் என்ற உணர்வு வருகின்றதோ உடன் இரு நாசி வழியாக மூச்சை மெதுவாக வெளிவிடவும். இதே போல் ஐந்து முறைகள் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here