தலைநகரில் தொடங்கியது மினி பஸ் சேவை

நேற்று ஞாயிற்றுக்கிழமை வரலாற்றின் மறுபதிவாக கோலாலம்பூரில் மினி பஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இது ரெப்பிட் கேஎல் பேருந்துகளை நிர்வகிக்கும் பிரசாரானா மலேசியாவின் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வழித்தடம் கூ300 என்னும் இந்த மினி பேருந்து சேவை அம்பாங் பாயின்ட் வணிக வளாகத்திலிருந்து அம்பாங் புக்கிட் இண்டா வரையிலானது. இந்த மினி பேருந்தின் நீளம் 8 மீட்டர் இதற்கு முன் இதே வழித்தடத்தில் இயங்கிய சராசரி பேருந்தின் நீளம் 12 மீட்டராகும்.
அறிமுக நாளான நேற்று அதிகாலை 5.30 மணி தொடங்கி நண்பகல் 12 வரையிலான நிலவரப்படி இக்குறுகிய கால அளவில் 21 முறை பயணித்து 200 பயணிகளை ஏற்றிச்சென்றுள்ளது. சுதந்திரத்தினம் மற்றும் மால் ஹிஜ்ரா கொண்டாட்ட விடுப்பில் இருக்கும் பொது மக்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் வேலைக்கு திரும்புகையில் கூடுதல் எண்ணிக்கையிலான பயணிகள் இச்சேவையை பயன்படுத்துவர் என பிரசாரானா மலேசியா நம்பிக்கை தெரிவித்தது. மூன்று மாதகால இச்சோதனை ஓட்டத்தின் வழி பலதரப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு மினி பேருந்து நகர் புறநகர் சேவைக்கு ஏற்புடையதா என்று கண்டறியப்படும் என்றார். கூ300 வழித்தடத்திற்கான இச்சேவை அதிகாலை 5.30 தொடங்கி இரவு மணி 11.40 வரை நீடிக்கும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =