தற்கொலை முயற்சியைக் குற்றச்செயலிலிருந்து அகற்ற உள்துறை அமைச்சு இணக்கம்

309ஆவது குற்றவியல் சட்டப்படி தற்கொலை முயற்சியைக் குற்றச்செயலிலிருந்து அகற்ற உள்துறை அமைச்சும் சட்டத்துறை அலுவலகமும் இணக்கம் தெரிவித்ததாக 2ஆவதுச் சுகாதாரத் துணை அமைச்சர், டத்தோ ஆரோன் அகோ டாகாங் தெரிவித்தார். இச்சட்டத்தை அகற்று வதற்கானப் பரிந்துரை குறித்து தற்போது அமைச்சரவை ரீதியில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இதில் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக தற்கொலை செய்வோர் அல்லது செய்ய முற்படுவோர் குற்றஞ்சாட்டப்படாமல் இருக்க இந்த 309ஆவதுப் பிரிவில் திருத்தம் செய்யப்படும் என்று மக்களவையில் தற்கொலை முயற்சிகளைக் குற்றச்செயலிலிருந்து அகற்ற எம்மாதிரியான அணுகுமுறைகளை அரசு மேற்கொண்டுள்ளது, மக்களிடையே தற்கொலைச் சம்பவங்களை குறைப்பதில் இது எந்தளவுக்கு பயனளித்துள்ளது என்று சே அலியாஸ் ஹமிட் (கெமாமான்-பாஸ்) கேள்விக்கு ஆரோன் அகோ டாகாங் பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + eighteen =