தற்காலிக வேலை பெர்மிட்டுடன் 1,540,000 அந்நியத் தொழிலாளர்கள்

இந்நாட்டில் 15 லட்சத்து 40,000 அந்நியத் தொழிலாளர்கள் தற்காலிக வேலை பெர்மிட் வைத்திருக்கிறார்கள் என்று தற்காப்புத்துறை
அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதில் வேலை பெர்மிட் காலாவதியானதால் 2,766 அந்நியத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
கிடைக்கப்பெறும் ரகசிய தகவல்களைக் கொண்டு அனைத்து ஏஜென்சிகளின் உதவியோடு அந்நியத் தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
அந்த வகையில் நாட்டில் 15 லட்சத்து 45 ஆயிரத்து 101 அந்நியத் தொழிலாளர்கள் தற்காலிக வேலை பெர்மிட் வைத்திருக்கிறார்கள்.
முதலாளிகளுக்கு அந்நியத் தொழிலாளர்கள் சேவை தேவைப்படுவதால் அந்நியத் தொழிலாளர்கள் தங்களது தற்காலிக வேலை பெர்மிட்டை புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
தற்போதுள்ள நிலவரப்படி 15,531 சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 786 பேருக்கு கோவிட் -19 நோய்த் தொற்று கண்டிருந்தது.
இவர்கள் அனைவரும் கோவிட் -19 நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று அவர் சொன்னார்.
இவர்கள் குணமடைய கடுமையாக பாடுபட்ட சுகாதார அமைச்சு, தேசியப் பாதுகாப்பு மன்றம் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல்லா
சானி எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − sixteen =