தற்காப்புத் துறை சார்ந்த வெள்ளை அறிக்கையின் நிலை என்ன?

0

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் தயாரிக்கப்பட்ட தற்காப்புத் துறைக்கான வெள்ளை அறிக்கையின் நிலை என்னவென்று தற்காப்புத் துறையின் முன்னாள் துணையமைச்சர் லியூ சின் தோங் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனலின் தற்காப்பு அமைச்சரான இஸ்மாயில் சப்ரி யாக்கோப், தினந்தோறும் கோவிட்-19 நோய் சம்பந்தமான அறிக்கையை அறிவிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி, தமது பொறுப்பில் இருக்கும் தற்காப்புத் துறை சம்பந்தமாக வாய் திறக்காது மௌனம் காப்பதாக லியூ சின் தோங் குற்றம் சாட்டினார்.
அவர் பதவியேற்ற பின்னர், அவர் சார்ந்த அமைச்சு சம்பந்தமாக என்ன செய்யப் போகிறார், என்ன மாற்றங்களைச் செய்யப் போகிறார், அதன் தூர நோக்கு என்னவென்பது போன்ற விவரங்களை அவர் இன்னும் அறிவிக்காமல் மெத்தனம் காட்டி வருகிறார்.
முன்னாள் தற்காப்பு அமைச்சர் முகமட் சாபுவும் தாமும் தற்காப்புத் துறையின் தகுதி, ஆயத்த நிலை, அதன் வீரர்களின் தகுதியை மேம்படுத்துதல், தற்போதைய வீரர்கள், முன்னாள் வீரர்களின் நலனைப் பேணுதல், சிவில் மற்றும் தற்காப்புத் துறையின் ஒத்துழைப்பைப் பேணுதல், துறையில் அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் புகுத்துதல், அனைத்துலக நிலையில் ஒத்துழைப்பை நாடுதல் போன்றவற்றை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையைத் தயாரித்ததாக லியூ சின் தோங் குறிப்பிட்டார். அந்த அறிக்கையின் தற்போதைய நிலை என்னவென்பதை ஜூலை 13ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற அவைக் கூட்டத்தில் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் விளக்கமளிக்க வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + sixteen =