தமிழ் மலர் வாசகர் ஓட்டம் 1.0 ; புதிய மலேசியா கொள்கைக்கேற்ப நடைபெற்றது|படங்கள்|

கோலாலம்பூர், ஆக. 19-
தமிழ்மலர் ஏற்பாட்டில் முதன் முறையாக வாசகர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பாடு செய்திருந்த ஓட்டம் நேற்று மிகவும் உற்சாகத்துடன் நடைபெற்றது. புதிய மலேசிய கொள்கைக்கு ஏற்ப மூவின மக்களும் பங்கு பெற்றனர். ஆண்கள் பிரிவில் முதல் பரிசை ஒரு மலாய்க்காரரும், இரண்டாவது பரிசை சீனரும், மூன்றாவது பரிசை இந்தியரும் வெற்றி கொண்டனர். அதனைப் போல் பெண்களுக்கான ஓட்டத்தில் முதல் பரிசை இந்தியப் பெண்ணும், இரண்டாவது பரிசை மலாய் பெண்ணும் , மூன்றாவது பரிசை சீனப் பெண்ணும் பரிசுகளை தட்டிச் சென்றனர். வாசகர்களிடையே புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்திக் கொள்வதுடன் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் தமிழ் மலர் நாளேடு ஏற்று நடத்திய வாசகர்களுக்கான ஓட்டப்பந்தயத்தை நடத்தியது.


நேற்று காலை 6.00 மணி தொடங்கி வாசகர்களும் பொதுமக்களும் போட்டி நடந்த தளமான கோலாலம்பூர் நாடாளுமன்ற அருகில் உள்ள லேக் கார்டனில் மக்கள் திரளாக கூடினர். காலை 7.45 மணியளவில் போட்டி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
பெரியவர்களுக்கு நிகராக தமிழ்ப்பள்ளி மாணவர்களும் அவர்களின் பெற்றோரும், ஆசிரியர்களும் திரளாக கலந்து கொண்டனர், அதேபோன்று சீனர்களும் மலாய்க்காரர்களும் இந்த ஓட்டப்பந்தயத்தில் நிறைவாக கலந்து கொண்டனர். மின்னல் பண்பலை அறிவிப்பாளர் தெய்வீகன் தாமரைச் செல்வன் மும்மொழியிலும் கலகலப்பாக அறிவிப்பு செய்தார்.


பெரியவர்களுக்கான ஓட்டப் போட்டியை பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த வேளையில் பள்ளி மாணவர்களுக்கான ஓட்டப் போட்டியை கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இந்தியப் பிரதிநிதி சுரேஷ்குமார் தொடக்கி வைத்தார்.
இவர்களுடன் கிள்ளான் தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஆர்.ஜெயந்திரன், அமைச்சர் கோபிந்த் சிங் அரசியல் செயலாளர் செனட்டர் சுரேஷ் சிங், செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன், அவரின் துணைவியாரும் முன்னாள் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருமான சந்திராதேவி தியாகராஜன், தமிழக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணி இயக்கத்தின் தலைவர் அன்பழகனின் துணைவியார் ஆஷா ராணி ஆகிய முக்கிய பிரமுகர்களுடன் சுமார் 850க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஓட்டப்பந்தயத்தில் கலந்து சிறப்பித்தனர்.


இந்த ஓட்டப்பந்தயமானது தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளிவிடுமுறைக்காலம் என்றாலும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவர்களும் பெற்றோரும் அழைத்து வந்த பள்ளி ஆசிரியர்களும் மிகுந்த உற்சாகத்தை வழங்கினர். குறிப்பாக சுங்கை திங்கி தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி, காஜாங் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஜோன் போஸ்கோ போன்றோர் பெருமளவில் தங்கள் பங்களிப்பை வழங்கினர்.


வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், வெற்றிக் கிண்ணம், பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டது. வந்திருந்த பிரமுகர்கள் அதை அணிவித்து சிறப்பு செய்தனர். நிகழ்வின் முத்தாய்ப்பு அங்கமாக அதிர்ஷ்ட குலுக்கு இடம்பெற்றது. அதிஷ்ட குழு நிகழ்வு முடியும் வரை பள்ளி மாணவர்கள் கலையாமல் அங்கு கூடி மிக உற்சாகத்துடன் பங்குப் பெற்றனர். இப்போட்டி பொது மக்களுக்காக நடத்தப்பட்டிருந்தாலும் தமிழ் மலர் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்ப்பள்ளிகள் வழங்கிய ஆதரவு மிகவும் உற்சாகம் அளிப்பதாக அதற்கு அவர்களுக்கு பாராட்டும் நன்றியையும் தெரிவிப்பதாக தமிழ் மலர் இயக்குனர் டத்தோ எஸ். எம். பெரியசாமி கூறினார்.

மேலும் படங்கள் / More Images :

https://drive.google.com/drive/folders/1X28zg-rVwwStCfFKLV5yfyMcrSYs6y5R?usp=sharing

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 5 =