தமிழ் மலர் நிருபருக்கு சாதனையாளர் விருது

0

ஊடகத்துறையில் நீண்டநாட்கள் சேவையாற்றிய வரும் ஜொகூர் மாநில தமிழ் மலர் நிருபருமான ஆர்.சுப்பிரமணியத்திற்கு ‘சாதனையாளர் விருது’ வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
அண்மையில் இங்கு ஜொகூர் இந்திய புகைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் 9ஆம் ஆண்டு விழாவில் ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர்.ராமகிருஷ்ணன் தமிழ் மலர் நிருபருக்கு இந்த விருதை வாங்கினார்.
ஊடகத்துறையில் ஆர்.சுப்ரா நீண்டகாலம் பணியாற்றி வருவதோடு தம்மால் இயன்ற சேவைகளைச் செய்து வருவது பாராட்டுக்குரியது என பெக்கோக் சட்டமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் மக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 3 =