தமிழ் மலர் நடத்தும் மெதுஓட்டப் போட்டிக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு!

0

எம்.முருகன்
கோலாலம்பூர், ஆக. 10-
தமிழ் மலர் நாளேடு நடத்தும் மெதுஓட்டப் போட்டிக்கு சமுதாயத்தில் பேராதரவு வழங்கப்பட்டு வருகிறது. இது ஓர் ஓட்டம் மட்டுமல்ல. இந்திய சமுதாயத்தில் வாசிப்பின் மீது நேசத்தை வளர்க்கவும் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு சிறந்த நடவடிக்கை என்பதால் தமிழ் மலர் முன்னெடுத்துள்ள இந்த முயற்சிக்கு நாட்டில் உள்ள வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், கட்சிகள் மற்றும் இயக்கப் பிரதிநிதிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் மலேசிய கிம்மா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம், நாட்டின் பிரபல நகை நிறுவனமான டீன் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் சிராஜுடின், விக்காஸ் அனைத்துலகப் பள்ளியின் உரிமையாளர் சைட் பின் யூசுப், மோஜோ நிறுவனம், சென்னை சில்க்ஸ் உரிமையாளர் தனசேகரன், கிள்ளான் சுந்தரராஜப் பெருமாள் கோயில் தலைவர் சங்கபூஷண் ஆனந்த கிருஷ்ணன், எம்.எஸ்.கே.நிறுவனத்தின் நிர்வாகி செல்வமேரி, டாமன்சாராவைச் சேர்ந்த தொழிலதிபர் மனோ, பிரெஸ்மா தலைவர் அயூப் கான், ஏசான் நிறுவனத்தின் தலைவர் அப்துல் ஹமிட் ஆகியோர் ஆதரவு தந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 3 =