தமிழ் – சீன தாய்மொழிப் பள்ளிகளின் பன்முகத்தன்மை நாட்டிற்குப் பெருமையே

0

நம் நாட்டில் தேசிய மொழியான மலாய் மொழி அடுத்து சீனம் மற்றும் தமிழ் தாய்மொழிப் பள்ளிகளை குறித்து யாரும் கேள்வி எழுப்புவதற்கு அடிப்படைக் காரணம் இல்லை. தாய்மொழி சார்ந்தவர்களும் மலேசியர்களே என்பதையும், ஒன்று பட்டால் மட்டுமே வளர்ந்த நாடுகளுக்கு இடையில் நாமும் கல்வித் துறையில் போட்டியிடும் வளமான வரலாற்றை படைக்க முடியும் என சங்காட் ஜோங் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அஸஹார் ஜமுலுடின் தெரிவித்தார். இந்த நாடு அடைந்த வெற்றியில் மலேசியர்கள் அனைவருக்கும் பங்குண்டு. இங்கு அனைவரின் கலாசார பாரம்பரியத்தை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக்கு விடைகொடுத்தப் பின்னர் கடந்த 31-08-1957இல் மலாயா சுதந்திரம் பெற்றது. அடுத்து கடந்த 1963இல் மலேசியாவாக விரிவடைந்தோம்.
மலேசியாவாக நாம் உருவாகி நேற்றோடு (16-9-2020) 57 ஆண்டுகளைக் கடந்தாலும் இன்றும் மலேசியர்களாக ஒளிர்கின்றோம். இனங்கள், மதங்கள் என வேறுபட்டாலும் அனைவரும் மலேசியர்களே என்னும் நிலையில் அனைத்து மொழிகளும் ஒன்றுக் கொன்று நிறைவை ஏற்படுத்தும் வகையில் பார்க்கப்பட வேண்டும், மதிப்பளிக்கப்பட
வேண்டும் என்று தெலுக்
இந்தான் தொகுதி அம்னோ தலைவருமான அஸஹார் குறிப்பிட்டார்.
எனது பிள்ளைகள் சீனப்பள்ளியில் பயின்றவர்கள். அவர்கள் மலாய் மொழி, மேண்டரின் மொழி, ஆங்கிலத்திலும் சிறந்து விளங்குகின்றனர். நம் நாட்டைப் பொறுத்தவரையில் கல்வி கற்பதற்கு பணம் ஒரு தடையல்ல. சிறந்த மாணவர்களுக்கு அரசு நிதி உதவி செய்கிறது. அரசியல் கட்சிகளும் செய்கின்றன.
மேலும் மாணவர்கள் தங்கள் புறப்பாட நடவடிக்கையை முன்னெடுக்கும் போது வெயில், மழை தாக்காமல் அவர்களின் பாதுகாப்புக்காக பள்ளி மண்டபம் எழுப்பும் திட்டம் கைகூடி வரும் நிலையில் உள்ளது என்றும்
அஸஹார் சிதம்பரம்பிள்ளை பள்ளிக்கு நிழற்
கூடாரம் வழங்கிய
நிகழ்ச்சியின் போது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − 3 =