தமிழ் இடைநிலைப்பள்ளி தேவையில்லை- முன்னாள் கல்வி அமைச்சரின் சர்ச்சை கருத்து

0

கோலாலம்பூர், ஜூலை 26-
தமிழ் இடைநிலைப்பள்ளி ஒன்றை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முன்னாள் கல்வி அமைச்சர் மாட்ஸிர் காலிட் கூறியிருக்கிறார்.
இதற்கென தனியாக சிறப்புக் குழுவை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் அவர்.
மாணவர்களை அவரவர் சொந்த மொழிப் பள்ளிகளுக்கு அனுப்பினால் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை எப்படி வளரும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.தாய்மொழியை தமிழ், சீனப் பள்ளிகளிலேயே படிக்கலாம். இதற்கென தனியாக ஓர் இடைநிலைப் பள்ளி தேவை யில்லை. இதில் நன்மை யைவிட கெடுதலே அதிகம்.
நல்லிணக்கம் எட்டாத தூரத்திற்குச் சென்றுவிடும். இப்போது இருக்கின்ற பள்ளிகளிலேயே மாணவர்களை படிக்க ஊக்குவிக்க வேண்டும் என்றார் அவர்.
நாட்டில் முதல் தமிழ் இடைநிலைப்பள்ளியைத் தோற்றுவிக்க சிறப்புக்குழு ஒன்று ஆய்வு செய்து வருவதாக அண்மையில் கல்வி துணையமைச்சர் தியோ நி சிங் மக்களவையில் கூறியிருந்தார்.
இது பற்றி தொடர்ந்து கருத்துரைத்த மாட்ஸிர், நாட்டில் அரசியல் சட்டப்படி தமிழ், சீனப் பள்ளிகளுக்கு இடமுண்டு, அதுவே போதும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 19 =