தமிழ்மலரின் முதல் முயற்சி; அபார வெற்றி..!

உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒவ்வொரு வார இறுதியிலும் கிள்ளான் பள்ளத்தாக்கில் ஓட்ட பந்தயங்கள் நடைபெற்று வருவது வழக்கமாக உள்ளது. நெடுந்தூர ஓட்டம், மெது ஓட்டம், கேளிக்கை ஓட்டம் என்று ஏதேனும் ஒன்று நடைபெற்று வருகிறது.
அதில் சீனர்களும் மலாய் சமூகத்தினரும் அதிகமாக கலந்து கொள்ளும் வேளையில் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.
மலேசிய ஓட்டப்பந்தய வரலாற்றில் இந்தியர்கள்தான் அதிகம்
பெயர் பெற்றவர்களாக விளங்கி யுள்ளனர். ஒலிம்பிக் அளவில் நாட்டிற்கு
புகழ் சேர்த்தவர்களில் டான்ஸ்ரீ டாக்டர் ஜெகதீசன், ஆசிரியர் ராஜாமணி
இன்னும் நமது மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள நிலையில் நெடுந்தூர ஓட்டத்தில் மலேசியாவைப் பிரதிநிதித்து ஓடிய சுப்பிரமணியம், திருப்பதி, செந்தூல் ராஜூ ஆகியோரின் தனித்திறன்களின் பெருமையையும் அளவிட முடியாது.ஆனால் தற்சமயம் அந்த பெருமைகள் அனைத்தும் குறைந்தும் நலிந்தும் காணப்படுவது மிகவும் கவலைகுரியது என்று தகவல் தொடர்பு பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் அரசியல் சிறப்புச் செயலாளர் செனட்டர் சுரேஷ் சிங் கூறினார்.
கோலாலம்பூர் லேக் கார்டனில் தமிழ்மலர் நாளேட்டின் ஏற்பாட்டில் நடைபெற்ற வாசகர்களுக்கான ஓட்டப் பந்தய போட்டியினை தொடக்கி வைத்து பரிசளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றுகையில் செனட்டர் சுரேஷ் சிங் அவ்வாறு கூறினார்.
இந்த ஓட்டத்தை முதல் முறையாக தமிழ்ப் பத்திரிகை ஏற்பாடு செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்றார் அவர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை
புரிந்த பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் ஓட்டப் பந்தய
போட்டியாளர்கள் பதிவு செய்ய நிர்ணயிக் கப்பட்ட நேரமான காலை 6.00 மணிக்கு முன்பே தளத்திற்கு வந்து விட்டார். காலை 6.00 மணிக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்ததுடன் தமிழ்மலரின் இந்த முயற்சிக்கு அவர் தனது வாழ்த்தினையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொண்டார்.
அங்கு குழுமியிருந்த ஓட்டக்காரர்களில் பலர் அவரை சூழ்ந்து கொண்டு தங்களின் கைபேசியில் ’செல்பியும், புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். தமது தொகுதியில் அமைந்துள்ள தம்புசாமி தமிழ்ப்பள்ளி, செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி மாணவர்களை சந்தித்ததில் அவர் மகிழ்ச்சி மிகவும் அடைந்தார். இதுபோன்ற போட்டி நிகழ்ச்சி களை தமிழ் மலர் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் அதற்கு தனது ஆதரவும் பங்களிப்பும் நிறைவாக இருக்கும் என்றும் பிரபாகரன் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் முதல் ஒட்டத்தை அவர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இந்த ஓட்டத்திற்கு அதிகமான மாணவர்களை அழைத்து வந்து கலந்து கொண்ட சுங்கை சோ தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தியின் முயற்சியை கிள்ளான் தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஆர். ஜெயந்திரன் பாராட்டினார்.
அப்பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் பங்கு பெற பேராதரவு நல்கிய டத்தோஸ்ரீ ஜெயந்திரனுக்கு தலைமை ஆசிரியரும் இதர
ஆசிரியர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும், தம்புசாமி பிள்ளை தமிழ்ப்
பள்ளி, அப்பர் தமிழ்ப்பள்ளி, பத்துகேவ்ஸ் தமிழ்ப் பள்ளி ஆகிய மாணவர்களுடன் 3 ஆதரவற்ற இல்ல மாணவர்களுக்கும் இப்போட்டியில் கலந்து கொள்ள அவர் ஆதவளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் மலாக்கா, புலாவ் செபாங் பள்ளியில் இருந்து ஒரு மாணவர் கலந்து கொண்டார். தூரத்திலிருந்து புறப்பட்டாலும் காலை 6.00 மணிக்கே அவர் தனது தாயாருடன் இங்கு வந்து ஓட்டத்தில் கலந்து கொண்டது உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்தியர்கள் கடந்த காலங்களை போல் விளையாட்டுத் துறையில் பிரகாசிக்க வேண்டும். அதுவே சமுதாயத்தின் அடையாளமாகும். அதற்கு அடித்தளம் அமைப்பது அவர்களை சிறு வயதிலேயே இது போன்ற துறையில் ஈடுபடச் செய்வதே ஆகும். அந்த வகையில் தமிழ் மலரின் ஓட்டப் போட்டியில் அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டதை டத்தோஸ்ரீ ஜெயந்திரன் வெகுவாகப் பாராட்டினார்.

மேலும் படங்கள் / More Images : https://drive.google.com/drive/folders/1X28zg-rVwwStCfFKLV5yfyMcrSYs6y5R?usp=sharing


இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்து பரிசுகளையும் எடுத்து வழங்கிய தமிழக மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணி இயக்கத் தலைவர் அன்பழகனின் துணைவியார் ஆஷா ராணி தமக்கு இது புதிய அனுபவம் என்றார்.
ஏதோ ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜனும் அவரது துணைவியாரும் முன்னாள் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருமான திருமதி சந்திரா தேவி தியாகராஜனும் என்னை அழைத்து வந்துள் ளார்கள் என்று நினைத்தேன். வந்தவுடன் இங்கு அதிகமானோரை பார்த்து ஆச்சரியப்பட்டேன் அவர் கூறினார். அதிலும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டது அவரை மெய்
சிலிர்க்க வைத்ததாகவும் புகழாரம் சூட்டினார்.
இப்போட்டி வெற்றியடைய பல்வகையில் உதவிய தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் தமிழ்மலரின் சார்பாக அதன் வாரியத் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
தமிழ் மலர் இளைஞர் பகுதி என்ற ஒரு குழுவை அமைத்து மிகவும் குறுகிய காலத்தில் இந்த ஏற்பாட்டை செய்து அதனை வெற்றிகரமாக நடத்தியது அவர்களது தன்னம்பிக்கையை புலப்படுத்தியதாகவும் அவர் பாராட்டினார். அதில் குறிப்பாக சில பெண்களே இரவு பகல் பாராது, அலுவலகத்திலே உறங்கி இதை முன் நின்று செய்து காண்பித்ததற்காக அவர் வெகுவாக பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் மிக ஆர்வமாக இருந்த போதிலும் அவர் கலந்து
கொள்ள முடியாத நிலையில் அவரது பிரதி நிதியாக
சுரேஷ் குமாரை அனுப்பியிருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு குயில் இதழ் உரிமையாளர் ’குயில் பதிப்புகளை வழங்கியதுடன் தனது பணியாளர்களையும் இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்.
அதனைப் போலவே ’மயில் இதழ் உரிமையாளர் டத்தோ ஆ.சோதிநாதன் தனது இதழ்களை வழங்கி ஆதரவு வழங்கினார்.
மேலும் வீடமைப்பு மேம்பாட்டாளர் ஏசான் ஹோல்டிங்ஸ் உரிமையாளர் டத்தோ ஹமிட் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கியதுடன் தனது நிறுவன பணியாளர்களை பங்கு பெற ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் படங்கள் / More Images : https://drive.google.com/drive/folders/1X28zg-rVwwStCfFKLV5yfyMcrSYs6y5R?usp=sharing

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =