தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைகள் தொடரட்டும்

0

இவ்வாண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மனிதவள அமைச்சர் எம்.குல
சேகரன் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதலை யும் தெரிவித்துக் கொண்டார்.
குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளின் தேர்வு முடிவுகள் ஒவ்வோர் ஆண்டும் முன்னேற்றம் அடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் இவ்வாண்டு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
இந்த முன்னேற்றத்திற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மாணவர்கள், அவர் களை சிறப்பான முறையில் வழிகாட்டிய ஆசிரியர்கள், தமிழ்ப்பள்ளிகளை வழிநடத்திய தலைமையாசிரியர்கள், பக்க பலமாக இருந்த பெற்றோர்கள் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்காக பாடு
பட்டு இயங்கி வரும் அனைத்து
இயக்கங்களுக்கும் தமது வாழ்த் துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு நம் நாட்டில் அவர்களுக்காக நடத்தி வரும் அறிவியல் போட்டிகள், இலவச பிரத்தியேக வகுப்புகள், வெளிநாட்டில் பெற்ற சாதனைகள் இப்படி பல சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சமீபத்தில் அனைத்துல அறிவியல் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் சாதனைகளைப் பார்த்து வியந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மனிதவள அமைச்சும் கல்வி அமைச்சும் ஒன்றிணைந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென ஏர் ஆசியாவுடன் ஒப்பந்தம் செய்து வந்தோம்.
இப்படிபட்ட திட்டங்கள் மேலும் தொடரப்பட வேண்டும். நமது பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவதை முக்கிய பங்காக நினைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =