தமிழ்ப்பள்ளி நடைபாதையில் தமிழ் எழுத்துகள் அதனை மிதித்து நடக்கும் கல்வி அதிகாரி

1

சிலியாவ் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் உள்ள நடை பாதையில் தமிழ் எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. அந்த எழுத்துகளை காலணி அணிந்து கொண்டு கல்வி இலாகாவின் உயர் அதிகாரி ஒருவர் மிதித்து நடந்து செல்வது போன்ற ஒரு காட்சி புலனத்தில் பரவலாகி வருகிறது.
இந்த காட்சியைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்து அப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் இதற்கு பொறுப்பாக இருந்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஆவேசமாக தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராமையா கேசவன் மிகவும் வேதனையுடன் தனது கருத்தை புலனத்தில் வைரலாக்கியுள்ளதோடு கடந்த மூன்று வாரங்களாக மாணவர்கள் தாய் மொழியை மிதித்து நடப்பது தமிழுக்கு துரோகம் செய்யும் நடவடிக்கையாகும். இது தொடர்பாக பள்ளிக்கு தெரியப் படுத்தியும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்கிறார்.
மலேசிய தமிழ் மணிமன்றத்தின் நெகிரி மாநில தலைவர் கா.மாரியப்பன், துணைத் தலைவர் காருண்யம் தனபாலன் மற்றும் நெகிரி கலைஞர் மைக்கல் பீமன், சிலியாவ் ஆர். அன்னமுத்து ஆகியோர் பள்ளிக்குச் சென்று பார்த்ததோடு தமிழ் மொழியை இந்த அளவு இழிவு படுத்தக் கூடாதென தெரிவித்தார்கள். மேலும் உடனே அதனை அழித்து விட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்கள். சிரம்பான் வர்மக் கலை செல்வராஜா, லோபாக் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஜி. பாலசிங்கம், ஸ்ரீ செனாவாங் மோகன் மற்றும் கம்போங் பாசீர் பாஸ்கரன் ஆகியோரும் இச்செயலைக் கண்டித்தனர். பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கச் செயலாளர் டேவிட் செல்வநாயகம் ஓர் அறிக்கையில் இப்பிரச்சினையில் தங்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லையெனத் தெரிவித்துள்ளதோடு இதில் தற்காத்து யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.

1 COMMENT

  1. பூமாதேவியை நாம் கடவுளாக வணங்குகிறோம். ஆனால் அதன் மேலேதான் எல்லா உயிரினக்களும் வாழ்கின்றன. நடக்கின்றன, உயிரிங்களைப் பெருக்குகின்றன,புணர்கின்றன,கழிகின்றன.அதனால் பூமாதேவியை வணக்காமல் இருக்கிறோமா? மாணவ்ர்களின் அறிவுப் பெருக்கத்தான எல்லாச் சாத்தியங்களையும் பள்ளி செய்கிறதென்றால் அதனைப் பாராட்டக் கற்றுக்கொள்ளவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + 10 =