தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 12,528 மாணவர்கள்

    நாட்டில் உள்ள 527 தமிழ்ப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 12,528 மாணவர்கள் நேற்று காலடி எடுத்து வைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தாக்கத்தினால் ஜனவரி 20ஆம் தேதி திறக்கப்படவிருந்த பள்ளிகள் ஒன்றரை மாதத்திற்குப் பின்பு நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. நாடு தழுவிய அளவில் உள்ள 6,242 பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 454,827 மாணவர்கள் பதிந்து கொண்டுள்ளனர். அரசாங்க பாலர் பள்ளிகளில் 204,155 மாணவர்கள் தங்களது கல்வியைத் தொடங்கினர். இணையம் வழி வீட்டிலேயே கல்வி கற்ற மாணவர்கள் நேற்று தங்களது பெற்றோருடன் உற்சாகமாகப் பள்ளிக்கு வந்தனர். இதனிடையே தமிழ்ப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 12,528 மாணவர்கள் நேற்று வரை பதிந்துள்ளனர். கடந்தாண்டில் தமிழ்ப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 13,197 மாணவர்கள் காலடி எடுத்து வைத்தனர். இவ்வாண்டு இந்த எண்ணிக்கையில் 669 குறைந்துள்ளது. இருப்பினும் இந்த வாரத்தில் மேலும் மாணவர்கள் முதலாம் வகுப்பில் பதிந்து கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் தமிழ்மொழி பொறுப்பாளர் தெரிவித்தார். பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மார்ச் 8ஆம் தேதி 3, 4, 5ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குத் திரும்புகிறார்கள். அந்த வகையில் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    three − 1 =