தமிழர்களின் பாரம்பரிய கலையை காக்கும் உறுமி மேள கலைஞர்கள்

0

உறுமிமேளம் உலகத் தமிழர்களின் இசைக்கருவியாகும். இது தமிழர் நாட்டுப்புற இசையிலும், தமிழிசையிலும் பெரும்பாலும் பயன் படுத்தப்படுகின்றது.
ஸ்ரீமகா மாரியம்மன், அய்யனார், கறுப்பசுவாமி போன்ற தெய்வங்களை வணங்குவதில் உறுமிமேளம் சிறப்பிடம் பெறுகிறது. இன்று, மலேசியாவில் உறுமிமேளம் இளையோர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், மலேசியாவில் நூற்றுக்கணக்கான உறுமிமேளக் குழுக்களும் உள்ளன.
காட்டில் வாழும் மீசைக்காரா, வேட்டையாட வருவாயா போன்ற பாடல் களுக்கு உருமிமேளக் கலைஞர்களின் வாசிப்பு பக்தர்களை மெய் சிலிர்க்க வைக்கும். இந்நாட்டை வளப்படுத்த சஞ்சிக் கூலிகளாக இந்தியர்கள் மலேசியா வுக்கு அழைத்து வரப்பட்டனர். தோட்டப் புறங்களில் குடியேற்றப்பட்ட இவர்கள், தங்கள் குடியிருப்பில் கோயில்களை கட்டிக் தெய்வங்களை வழிபட்டனர்.
இக்காலக் கட்டத்தில் கோயில் திருவிழாவில் முக்கிய இசைக் கருவியாக உறுமிமேளமும் நாதஸ்வரமும் பயன்படுத்தப்பட்டன. இதில் இளைஞர்களை அதிகம் கவர்ந்தது உறுமிமேளமாகும்.
சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியாவில் உறுமிமேளம் வாசிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதில் பங்கெடுத்துள்ளனர். மலேசியாவில் உறுமிமேளக் கலைஞர்களுக்காக ஒரு சங்கம் இல்லாத குறையை தீர்த்து வைப்பதில் டி.எச்.ஆர். ராகா அறிவிப்பாளர் கவின் மாறனின் பங்கு அளப்பரியது.
இவரின் முயற்சியால் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் மலேசிய உறுமிமேள இசைக் கலைஞர்கள் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. தேசிய சங்கங்களின் பதிவு இலாகாவில் முறையாக பதிவு செய்யப் பட்டிருக்கும் இச்சங்கத்தில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
மலேசிய உறுமிமேளக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக சிவா பொறுப்பேற்றார். இப்போது இடைக்கால தலைவராக விக்கி தலைமை ஏற்றுள்ளார். செயலாளராக கோபாலும் ஆலோசகராக கவின் மாறனும் உள்ளனர்.
இந்நாட்டில் உள்ள உறுமிமேளக் கலைஞர்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட இச்சங்கம் இன்று மிக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
பிரதமர் துறை அமைச்சின் கீழ் செயல்பட்ட மித்ராவின் ஆதரவோடு உறுமிமேளக் கலைஞர்கள் இசைப் பயிற்சியும் பல மாநிலங்களில் நடத் தப்பட்டது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான உறுமிமேளக் கலைஞர்கள் முறையாக கலையைக் கற்றுள்ளனர் என்று கவிமாறன் தெரிவித்தார். தெற்கு முதல் கிழக்கு வரை 300க்கும் மேற்பட்ட உறுமிமேள இசைக் கலைஞர் குழுக்கள் உள்ளன. இதில் இடம் பெற்றுள்ள கலைஞர்கள் இன்று முறையாக வேட்டி, ஜிப்பா அணிந்து இசையை அருமையாக வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இடுப்புக்கு மேல் வேட்டியைக் கட்டிக் கொண்டு உறுமிமேளம் வாசிக்கக்கூடாது என்ற உத்தரவையும் இவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பத்துமலை, ஈப்போ, பினாங்கு போன்ற இடங்களில் நடக்கும் தைப்பூச காலங்களில் உறுமிமேளக் கலைஞர்கள், காவடிகள் ஏந்தி காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப உறுமிமேளம் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான உறுமிமேள இசை இன்று மலேசியாவில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு மலேசிய உறுமிமேள இசைக் கலைஞர்களின் சங்கத்தின் பங்களிப்பும் முக்கியமானது என்று அவர் சொன்னார்.
பத்துமலைத் திருத்தலத்தில் நூற்றுக்கணக்கான உறுமிமேளக் கலைஞர்கள் ஒன்றுகூடி உறுமிமேளம் வாசித்தனர். இது மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்தது. மலேசிய உறுமிமேளக் கலைஞர்களின் சாகசம், உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், உலகைப் புரட்டி எடுக்கும் கொரோனா நோய்த் தொற்றால் அந்நிகழ்ச்சி நடைபெற முடியாமல் போய்விட்டதாக அவர் சொன்னார்.
இவ்வாண்டு நடந்த தைப்பூசத்திற்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட கோவிட் -19 தாக்கத்தினால் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. மூன்று மாதங்களுக்கு பின்னர் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டாலும் எஸ்ஓபி விதிமுறைகளுக்கு உட்பட்டு தரிசனங்கள் நடைபெறுகின்றன.
பக்தர்கள் மிகப்பெரிய அளவில் கூடும் வகையில் இன்று கோயில் திருவிழா நடைபெறவில்லை. இதனால், உறுமிமேளக் கலைஞர்களின் வருமானமும் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
இதனிடையே, பத்துமலை ஐயப்பன் சுவாமி ஆலயத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் சிலாங்கூர் – கூட்டரசுப் பிரதேச உறுமிமேள கலை ஞர்கள் சங்கத் தலைவர் ரூபன் வீரசிங்கம் மற்றும் உறுமிமேள இசைக் கலைஞர் ராஜேஸ் கூறும்போது, எங்கள் இயக்கத்தில் அதிகமான இளைஞர்கள் உறுமியை வாசித்து வருகிறார்கள்.
கோயில்களில் திருவிழா காலங்களில் காவடி எடுப்போருக்கும் ரதம் புறப்பட்டு திரும்பும் வரையிலும் எங்கள் உருமிமேளக் கலைஞர்கள் பல மணி நேரம் உருமியை வாசிக்கிறார்கள்.
ஆண்டுதோறும் பத்துமலை நோக்கி செல்லும் வெள்ளிரத ஊர்வலத்தில் எங்கள் கலைஞர்கள் வாசிக்கும் உறுமிமேள இசையை ஆயிரக்கணக் கானோர் கண்டுகளிக்கிறார்கள்.
உறுமிமேள இசைக்கு இடையே கோலாட்டங்கள், கரகாட்டங்கள் இடம் பெறுகின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்.
உறுமிமேள இசையானது ஒரு புனிதமானது. இதை முறையாக கற்றவர் கள் மட்டுமே வாசிக்க முடியும். அம்மன், முனீஸ்வரர், ஐயப்பன் சுவாமி போன்ற தெய்வங்களுக்கு எங்கள் கலைஞர்கள் வாசிக்கும் இசையானது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மலேசிய உள்நாட்டுக் கலைஞரும் திரைப்பட தயாரிப்பாளருமான தினேஷ் கூறுகையில், உறுமிமேளக் கலையை அதிகமான இளைஞர்கள் வாசித்து வருவது பெருமையளிப்பதாக குறிப்பிட்டார்.
மலேசியாவில் அதிகமான இயக்கங்கள் இருப்பது பெருமையாக உள்ள வேளையில் நமது இளைஞர்களும் இதில் உறுப்பினர்களாகச் சேர்ந்து இசைக் கலையை கற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நான் தயாரித்த வெடிகுண்டு பசங்க திரைப்படத்தில் சின்னராசா உறுமி மேள இசைக்குழுவுக்கு வாய்ப்புக் கொடுத்தேன். உறுமிமேளக் கலைஞர் களி
காட்சிகளை என் மனைவி இயக்குநர் விமலா பெருமாள் சிறப்பாக இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் இதை பார்த்து பெரும் ஆதரவு தெரிவித்ததாக அவர் சொன்னார்.
இந்த உறுமிமேளக் கலையை உள்நாட்டுக் கலைஞர்கள் மட்டுமே
வாசித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 4 =