தமிழகத்தில் பரவலாக மழை- 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்ள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டத்தில் பலத்த மழை பெய்கிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு முதலே திருச்சி, அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருச்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =