தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர்மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14-வது கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தின் சேவா பவனில் நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ‘‘செப்டம்பர் 23-ந்தேதி வரை 37.3 டி.எம்.சி. காவிரி நீர் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும் கர்நாடகா செயல்படுத்தவில்லை. கர்நாடகாவில் அதிகளவில் மழை பெய்து வரும் நிலையில் காவிரியில் நீர் திறக்கப்படவில்லை. அக்டோபர் மாதத்திற்கான நீர் பங்கீட்டையும் உடனே வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்’’ என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 5 =