தமிழகத்திற்கு ரூ.295 கோடி உள்ளாட்சி நிதி- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் அடியோடு முடங்கி உள்ள நிலையில், மத்திய அரசு 20 லட்சம் கோடிக்கான பொருளாதார மீட்பு திட்டங்களை அறிவித்தது. 
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், ரூ.20 கோடிக்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், 10 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள் வழங்கும்  திட்டம், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் ஆகியவற்றுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதேபோல் தகுதியான குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் முத்ரா திட்டத்தில் கடன்பெறும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி அவசர கால கடன் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுதவிர நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் தவணையாக 28 மாநிலங்களுக்கு ரூ.5005.25 கோடி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில் தமிழகத்திற்கு ரூ.295 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 3 =