தப்ளிக் பங்கேற்பாளர்கள் 13 பேர் தாயகம் திரும்பினர்

0

இந்தியாவில் சிக்கிக் கொண்டிருந்த தப்ளிக் சமய நிகழ்வு பங்கேற்பாளர்கள் 13 பேர் நேற்று முன்தினம் இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் தாயகம் திரும்பினர் என்று வெளியுறவு துணையமைச்சர் டத்தோ கமாருடின் ஜபார் கூறினார். புதுடில்லியில் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டிருந்த 12 பேரும் மஹாராஷ்டிராவில் உள்ள அம்ராவதியில் இருந்த எந்தவொரு குற்றச்சாட்டையும் மேற்கொள்ளாத ஒருவரும் தாயகம் திரும்பிய தப்ளிக் சமயப் பங்கேற்பாளர்கள் ஆவர்.
இந்த அனைத்து தப்ளிக் சமயப் பங்கேற்பாளர்கள் மீதும் கொரோனா வைரஸுக்கான சோதனை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர்கள் நீதி, சட்ட பயிற்சி மையத்தில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
தப்ளிக் சமய நிகழ்வில் பங்கு கொண்ட 62 பேர் முதல் கட்டமாக கடந்த ஜூலை 18இல் நாடு திரும்பினர். கடந்த ஜூலை 22இல் இரண்டாம் கட்டமாக 40 பேர் நாடு திரும்பினர்.
இன்றைய நிலவரப்படி தப்ளிக் சமய நிகழ்வில் பங்கு கொண்ட மலேசியர்கள் 74 பேர் இந்தியாவில் உள்ளனர் என்றார் அவர்.
அவர்களில் 13 பேர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான இந்திய அரசாங்கத்தின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர். மேலும் 52 பேர் பீஹார், ஜார்கன்ட் தெலுங்கானா, தமிழ் நாடு, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள மலேசியப் பிரதிநிதிகளின் உதவியோடு அவர்களின் நலனை விஸ்மா புத்ரா கண்காணித்து வருகிறது என்று கமாருடின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + twelve =