தனிமைப்படுத்திக் கொள்ளும் உத்தரவை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

0

வெளிநாடுகளில் இருந்து திரும்பி வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ளும் உத்தரவை மீறியதற்காக 80 பேருக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளதாக மூத்த அமைச்சர்
இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். இன்னும் வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்பவர்களிடம் சுகாதார அதிகாரிகள் 2,078 பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் சொன்னார். கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து மலேசியாவிற்குத் திரும்புவோர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப் படுவதில்லை என்றார் அவர்.
இவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
சமூக நல இலாகாவில் பதிவு செய்து கொண்டுள்ள பேறு குறைந்தவர்களுக்கு தனிமைப்படுத்தும் கட்டணங்கள் தவிர்க்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். அனைத்துத் தனிமைப் படுத்தும் மையங்களிலும் அதற்கான கட்டணங்கள் ஒரே அளவாகவே இருக்கும் என அவர் சொன்னார். இதனிடையே நேற்று முன்தினம் கோவிட்-19 நிபந்தனைகளை மீறியதற்காக104 பேர் கைது செய்யப்பட்டதாக
இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 5 =