தனித்து வாழும் தாய் மகேஸ்வரி வீட்டைக் காலி செய்ய நெருக்குதல்

  தனித்து வாழும் தாயான மகேஸ்வரி கிருஷ்ணசாமி, தாம் குடியிருக்கும் வீட்டைக் காலி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தினால் செய்வதறியாது துயரத்தில் ஆழ்ந்து வருகிறார்.
  கோவிட்-19 தொற்று உருவாவதற்கு முன்னர் அவர் உணவுக் கடைகளில் பாத்திரங்களைக் கழுவி தமது இரு பிள்ளைகளையும் காப்பாற்றி வந்துள்ளார். நடமாட்டக் கட்டுப்பாடு காலத்தில் அந்த வேலையை இழந்த அவர் வீடுகளைச் சுத்தம் செய்வது, காய்கறிகளை நறுக்கிக் கொடுத்து, வரும் சம்பாத்தியத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறார்.
  தாம் குடியிருக்கும் மாநகராட்சிக்குச் சொந்தமான தாமான் ஃபிரீ ஸ்கூல் அடுக்குமாடி வீட்டுக்கான மாத வாடகை 97 ரிங்கிட்டை கடந்த 6 மாதங்களாகச் செலுத்தத் தவறியதை அடுத்து நவம்பர் 30ஆம் தேதி அவர் வீட்டைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
  நிரந்தர வேலையில்லாத நிலையில் வீட்டைக் காலி செய்தால், எங்கே தங்கியிருப்பது என்ற கவலையில் அவர் இருக்கிறார்.
  இதனிடையே, தம்முடைய நிலைமையை அறிந்த சில நல்ல உள்ளங்கள் உதவிகளைச் செய்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
  தமக்கு யாராவது வேலை கொடுத்து உதவ முகநூலில் செய்தி வெளியிட்டபோது, யாரும் உதவ முன்வரவில்லை.
  சமூக நல உதவிக்கு விண்ணப்பித்திருந்தபோதும், அது இன்னும் கிடைக்கவில்லை. இந்நிலையில், தமது இளைய மகன் நோயுற்று இருப்பதால், அறுவை சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
  அவரின் துயரக் கதையைக் கேள்விப்பட்ட ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ் என் ராயர் அவருக்கு உதவ முன்வருவதாகக் குறிப்பிட்டுள்ளது ஆதரவைத் தருகிறது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  5 × five =