தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம்: சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட்

0

விசாரணைக்கு சென்ற தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement

சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

image

Advertisement

Advertisement: 3:05

கைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கியதால்தான் அவர்கள் உயிரிழந்ததாகச் கூறப்படும் நிலையில் அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பெர்னாட் சேவியர் நாளை பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த விவகாரத்தில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − eighteen =