தடைகளுக்கே சாவல் விட்ட தவனேஸ்வரன்

காரணத்தை மட்டும் காட்டி படுத்துறங்கும் இளைஞர்களுக்கு மத்தியில் தடைகளை கதற விட்ட பாரா ஆசியன் விளையாட்டுப்போட்டியின் தேசிய  ஓட்டப்பந்தய வீரரான ஒருவரை நேர்காணல் செய்ய வாய்ப்புக்கிடைத்தது.
தன் தாயின் வயிற்றிலிருந்து இவ்வுலகத்திற்கு வரும் போது மருத்துவர் செய்த சிறு தவறினால் தனது இடது காலில் ஏற்பட்ட பாதிப்புனால் பலராலும் ஒதுக்கப்பட்ட ஒரு இளைஞரின் சாதனையை யாரேலாம் அறிந்திருப்போம்?

ஜொகூர் சிகமாட் மாநிலத்தில் ஒரு தோட்டத்தில் சுப்ரமணியம் விஜேயலட்சிமியின் தவ முதல்வன் தவனேஸ்வரன்.இருப்பத்து இரண்டு வாயதான இவ்விளைஞர் விளையாட்டுத்துறையில் சாதித்து தற்போது தனது பெற்றோர்களுக்கு வீடு ஒன்றை வாங்கியும் தந்திருக்கிறார்.
தனது 10 வயதில் ஓட்டத்தை தொடங்கிய தவனேஸ்வரனுக்கு 10 வயதை தாண்டும்வரை பள்ளியில் ஓடுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை.விளையாட்டின் மேல் இருந்த ஆர்வத்தாலும் அவரின் ஓட்டத்தைப் பார்த்த பள்ளியின் ஆசிரியர்களும் கொடுத்த ஊக்கத்தினால் தனது பயனம் தொடர்ந்தது என்றார்.
தன்னால் சாதிக்க முடியும் என்ற குறிக்கோளோடும் ஓட்டப்பந்தயத்தின் மீது இருந்த காதலாலும் இடைநிலைப்பள்ளிக்கு சென்றார்.அங்கு தனக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைத்தது.பள்ளியில்,மாநிலதில் என்று எங்கு போட்டி நடந்தாலும் அதில் கலந்துக் கொண்டதாக கூறினார்.
அப்படி கலந்து கொண்ட ஒரு போடியில்தான் பயிற்சியாளர் ஒருவரின் ஆதரவால் தனக்கு பாராலிம்பிக்கில் ஓடுவதற்கு வாய்ப்புக்கிடைத்தது என்று தெரிவித்தார்.
இதுவரை மலேசியாவை பிரதிநிதித்து 3 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கம் வென்றியிறுக்கிறார்.2017 ஆம் ஆண்டு புக்கிட் ஜாலில் நடைப்பெற்ற பாரா ஆசியான் விளையாட்டுப்போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்போட்டியை 24.15 வினாடிகளில் முடித்து தங்கப்பதகத்தையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் ஒரு சிறந்த பயிற்சியாளராக வர வேண்டும்.அதுமட்டுமல்லாது இலவசமாக பயிற்சிகளை வழங்க வேண்டும் என்பது நமது தவ புதல்வனின் ஆசையும் கூட.
இன்றைய தலைமுறையினர் விளையாட்டுத்துறையில் ஆர்வம் காட்டாதது தனக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாக கூறினார்.அதாவது விளையாட்டுத்துறையை விட வேறு எங்கும் சம்பாதிக்கும் சாத்தியம் இல்லை. விளையாட்டுத்துறை ஒருவருக்கு நல்ல ஒழுக்கத்தை கற்றுத்தரும்.ஆகவே பெற்றோர்கள் கண்டிப்பாக தங்களது பிள்ளைகளுக்கு ஊக்கமும் ஆர்வமும் கொடுக்க வேண்டும்.பிள்ளைகள் எதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு தோள் கொடுக்க வேண்டும்.
அவ்வகையில் தனக்கு ஊக்கத்தையும் ஆதரவையும் கொடுத்த தனது பெற்றோர்களுக்கு இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
சாதனை படைக்க தளத்தை தேடும் இளைஞர்களே விளையாட்டுத்துறையுலும் சாதனை படைக்க முடியும், முயற்சி செய்தால் மட்டும்.அதற்கு மிக பெரிய எடுத்துக்காட்டக விளங்கும் நமது தவ புதல்வன் தவனேஸ்வரனுக்கும் தலைவணங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்போம்.எத்தனை எத்தனை சோதனைகள் வந்தாலும் தட்டி விட்டு சாதனைகளை படைக்க பயணத்தை தொடருவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 5 =