தடுப்பூசித் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

கோவிட்-19 தடுப்பூசி போடும் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளையும் பங்கேற்க வைக்க வேண்டும் என்று மலேசிய தனியார் மருத்துவமனைகள் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. அத்திட்டத்தில் அரசாங்கத்திற்கு உதவிபுரிய வேண்டியது அவசியம் என்று தனியார் மருத்துவமனைகள் உணர்கின்றன. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்திட்டம் அடுத்தாண்டு பிப்ரவரியில்தான் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவொரு மிக நீண்ட காலமாக இருப்பதாலும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருப்பதாலும் தனியார் மருத்துவமனைகளின் பங்கேற்பு இன்றியமையாதது என்று அச்சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் குல்ஜிட் சிங் நேற்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + fourteen =