தடுப்பு முகாம்களில் உள்ள அந்நிய நாட்டவர்களைத் திருப்பி அனுப்புங்கள்

கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அந்நிய நாட்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும்படி மனித உரிமை அமைப்பான தெனாகானித்தா அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தின்போது கைது செய்யப்பட்டுள்ள ஆவண மற்ற அந்நிய நாட்டவர்கள் குடிநுழைவு
தடுப்பு முகாம்களில் வைக்கப்பட் டுள்ளது ஒரு தவறான நடவடிக்கை என தெனாகானித்தாவின் நிர்வாக இயக்குநர் குளோரின் ஏ தாஸ் கூறினார்.
புக்கிட் ஜாலிலில் உள்ள குடிநுழைவு இலாகாவின் தடுப்பு முகாமில் 60 ஆவணமற்ற அந்நிய நாட்டவர் களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து அவர் கருத்துரைத்தார்.
இவர்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்படுவதால், ஏற்கெனவே அங்கு வைக்கப் பட்டுள்ள கைதிகளுக்கும் கோவிட்-19 வைரஸ் எளிதில் தொற்றும் வாய்ப்பு இருப்பதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 12 =