தஞ்ஜோங் பியாய் இடைத்தேர்தலில் கெராக்கான் வேட்பாளராக வெண்டி சுப்பிரமணியம்

0

எதிர்வரும் தஞ்ஜோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கெராக்கான் கட்சியை பிரதிநிதித்து அக்கட்சியின் துணைப் புதுச்செயலாளர் வெண்டி சுப்பிரமணியம் போட்டியிட விருக்கிறார். 
தஞ்ஜோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முகமட் பாரிட் முகமட் ரபிக் (வயது 42). கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் இந்த இடைத்தேர்தலில், ஜொகூர் பாருவைச் சேர்ந்த 38 வயதுடைய ஒரு வழக்கறிஞரான இவர் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி வேட்பாளர்களை எதிர்நோக்க உள்ளார்.  இந்த இடைத்தேர்தலில் பெர்சத்து கட்சி தனது தஞ்ஜோங் பியாய்  டிவிஷன் தலைவர் கர்மையினி சர்டினியை வேட்பாளராக முன்மொழிந்து உள்ளது. 
தஞ்ஜோங் பியாய்  நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நவம்பர் 2 மற்றும் வாக்களிப்பு நவம்பர் 16ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. 
கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் முகமட் பாரிட் தேசிய முன்னணி வேட்பாளர் வீ ஜேக் செங்கை 524 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here