தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் சதி நாச வேலைகள் நிகழலாம்!

0

தஞ்ஜோங் பியாய் இடைத்தேர்தலுக்கான தனது வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி தே.மு.வுக்கு எதிராக சதி நாச வேலையில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
நியமன நாள் நெருங்கி வந்தாலும், அத்தொகுதியில் தே.மு. சார்பில் போட்டியிடுவதற்கு அம்னோ-மசீச ஆகிய இரண்டு கட்சிகளுக்கு யாருக்கு வாய்ப்பளிப்பது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று ஸாஹிட் கூறினார். கடுமையான பிரசாரம் தொடங்கி விட்டாலும் வேட்பாளரை அறிவிக்கும் காரியத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று தே.மு. சார்பில் பல தரப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பரப்புரை தீவிரமாக உள்ளது மற்றும் வேட்பாளரை அறிவிப்பதைத் தடுத்து நிறுத்துமாறு பல்வேறு தரப்பினரால் கேட்டுக் கொள்ளப்பட்டதாக ஸாஹிட் குறிப்பிட்டார். நமது வேட்பாளர் உள்ளூரைச் சேர்ந்தவராக இருப்பார். ஆனால் ஜொகூர் அம்னோ தலைவர் ஹஸ்னி முகமட் நேற்று வேட்பாளரை அறிவிக்க வேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்தியுள்ளார்.”
மசீச தலைவர் வீ கா சியோங், எந்தவோர் அறிவுறுத்தலும் கொடுக்கவில்லை. ஆனால் அதை இன்னும் அறிவிக்க வேண்டாம் என்று அவரும் என்னிடம் கிசுகிசுத்தார்” என்று அவர் நேற்று பொந்தியான் அம்னோ தலைமையகத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களிடம் கூறினார்.
கடந்த பொதுத் தேர்தலில் அவதூறு மற்றும் தவறான வாக்குறுதிகள்” காரணமாக தே.மு. தோற்றது. மற்றொரு முக்கிய காரணி நாசவேலை என்று ஸாஹிட் கூறினார்.
எனவே, தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்தால் தே.மு.வால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.
எங்கள் இயந்திரங்களை நாசப்படுத்த முயற்சிக்காதீர்கள். நமக்கு முன்னால் உள்ள நிதர்சனம் என்னவென்றால், வாக்காளர்கள் தே.மு. மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.”
“நாசவேலை, அச்சுறுத்தல்கள் அல்லது விரும்பத்தகாத முயற்சிகள் இருந்தால், நாம் மீண்டும் தோல்வியடைவோம்.”
தஞ்ஜோங் பியாய் மசீச.வின் பாரம்பரிய தொகுதியாக இருந்து வருகிறது. ஆனால் அது மலாய்க்காரர்களை பெரும்பான்மை வாக்காளர்களாகக் கொண்டுள்ளதால் அம்னோவுக்கு வழங்குவதற்கான தீவிர பரப்புரையும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 17 =