தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் 18 வயதுடையவர்கள் போட்டியிடலாம்

அடுத்தமாதம் நடைபெறவிருக்கும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 18 வயதுடையவர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடலாம் என தேர்தல் ஆணையத் தலைவர் அஸ்ஹார் அஸிஸான் ஹருண் கூறினார்.
இது அரசிதழில் பதிவுபெற்றுவிட்டதால் 18 வயதுடையவர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடத் தடையேதும் இல்லை என்றார் அவர்.
இருப்பினும் இதன் இறுதி முடிவு தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியின் கையில்தான் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதே வேளையில், இந்த விவகாரம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தும் என அவர் தெரிவித்தார்.
கூட்டரசு சட்டத்தின் 47 மற்றும் 119 பிரிவுகளின் திருத்தங்களுக்கு செப்டம்பர் 4ஆம் தேதி அரச முத்திரை கிடைத்துவிட்டதாக சட்டத்துறை அலுவலகத்தின் இணையதளம் கூறுகிறது.
கடந்த ஜூலை 16ஆம் தேதி மக்களவையில் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =