தங்க நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

தங்க நகைகளுக்கு வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி முதல் ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம் ஆகிறது என்ற அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

இதுகுறித்து நுகர்வோர் விவகாரங்கள் துறை முறையான அறிவிக்கையை அடுத்த ஆண்டு ஜனவரி 15-ந் தேதி வெளியிடும் என அந்த துறைக்கான மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

தங்களிடம் இருப்பில் உள்ள நகைகளை விற்று தீர்த்து கொள்வதற்காகத்தான் ஓராண்டு கால அவகாசம் தரப்படுகிறது.

மத்திய அரசு

அறிவிக்கை வெளியாகி ஓராண்டில் ‘ஹால்மார்க்’ முத்திரை தங்க நகைகளில் பதிப்பது நடைமுறைக்கு வந்து விடும்.

தங்கநகைகளின் சுத்த தன்மையை சான்றளிப்பதுதான் ‘ஹால்மார்க்’ முத்திரை. இது தேசிய தர மதிப்பு நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.

ஹால்மார்க் முத்திரை 4 முத்திரைகளை கொண்டது. அவை பி.ஐ.எஸ். முத்திரை, தங்கத்தின் சுத்த தன்மையை குறிக்கும் முத்திரை, ஹால்மார்க் மையத்தின் முத்திரை, நகைக்கடையின் முத்திரை ஆகியவை ஆகும். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − eight =