தகுதி, திறமைக்கு ஏற்ற வேலை அருளும் சுப்பிரமணியர் ஸ்லோகம்

ராஜராஜஸகோத்பூதம் ராஜீவாயத லோசனம்
ரதீசகோடி ஸௌந்தர்யம் தேஹிமே விபுலாம் ச்ரியம்

வேலை தேடுபவர்கள் தினமும் துதிக்க வேண்டிய அற்புத மந்திரம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், உங்கள் வீட்டின் பூஜையறையில் இருக்கும் சுப்பிரமணியர் ஸ்வாமி படத்திற்கு முன்பு நின்றவாறு 108 முறை துதித்து சுப்ரமணியரான முருகப்பெருமானை வணங்க வேண்டும். கல்வி முடித்து வேலை தேடுபவர்களுக்கும், வேறு வேலையிலிருந்து புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களும் இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் துதித்து வந்தால் அவர்கள் விரும்பிய வகையான வேலை கிடைக்கப்பெறுவார்கள்.

தற்காலங்களில் கல்வி கற்ற அனைவருக்குமே அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைப்பது பெரும் போராட்டமாக இருக்கிறது. ஒருவருக்கு வேலை கிடைக்க அவரின் தகுதி, திறமை ஆகியவற்றோடு தெய்வ அருளும் அவசியமாகிறது. இம்மந்திரம் கூறி வழிபடுபவர்களுக்கு அந்த தெய்வத்தின் அருளால் அவர்கள் விரும்பிய படியான வேலை கிடைக்கப்பெறுவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 13 =