தகுதியான கல்விமான்களையே பல்கலைக்கழகத் துணை வேந்தர்களாக நியமிக்க வேண்டும்


இனம், சமயம் சார்ந்து பொது நிறுவனங்களில் தலைவர்களை நியமிப்பதன் மூலம் மலேசிய கல்வித் துறை பின்தங்கி இருப்பதாக முன்னாள் அரசின் மேல்பட்ட பதவியை வகித்து வந்த டான்ஸ்ரீ ரேமன் நவரத்தினம் தெரிவித்துள்ளார்.
இனம், சமயம் சார்ந்து தலைமைப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நாட்டில் பிரிவினையே அதிகரிக்கும். அது உலக வரைபடத்தில் நாட்டுக்கு இழுக்கையே கொண்டுவரும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆசிய வியூக, தலைமைத்துவக் கழகத்தின் தலைவரான அவர், அண்மையில் பத்திரிகையாளர் அஸ்மான் ஊஜாங்கின் கருத்தை ஆதரித்து இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பல்கலைக்கழகத் துணை வேந்தர்களாக மலாய்க்காரர் அல்லாதவர்களை அதிகமாக நியமிக்க வேண்டுமென அஸ்மான் கேட்டுக் கொண்டார்.
5 பல்கலைகழகங்களில் துணை வேந்தர் பதவிகள் காலியாகவே உள்ளதாகவும் அவை இன்னும் நிரப்பப்படவில்லை என்றும் புகாராக அவர் தெரிவித்திருந்ர்தார்.
ரேமனும் இன்னொரு முன்னாள் அரசின் மேநிலை அதிகாரியுமான டான்ஸ்ரீ ஷாரிப் காசிமும் அரசு பல்கலைக்கழகங்களில் இனம், சமய வித்தியாசம் பார்க்காமல் தகுதியானவர்களையே முக்கிய பதவிகளில் நியமிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டின் தகுதியான மலாய்க்காரர் அல்லாத கல்விமான்கள் இருப்பதாக அவர்களிருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த முக்கியப் பதவிகளில் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே நியமிப்பதில் நியாயமில்லை என்றும் அது பல்லின சமுதாயத்தைப் பிரதிபலிக்க வில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இன வாரியாக நாம் சிறந்த ஒருவரைத் தீர்மானிக்க முடியாது. அதில் பதவிக்கும் பொறுப்புக்கும் மிகவும் தகுதியானவரை தேர்ந்தெடுப்பதே அறிவுடைமையாகும்.
அஸ்மான் மேலும் கூறும்போது, தற்போது துணை வேந்தர்களை நியமிப்பதில் அரசின் தலையீடும் இருப்பதாக அஸ்மான் குறிப்பிட்டார்.
இதுவே நாட்டின் முக்கிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
1969 மே கலவரத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையின் பின்விளைவே இந்த அரசியல் தலையீடு என்று ரேமன் நவரத்தினம் குறிப்பிட்டார்.
நாட்டில் 20க்கும் அதிகமான பொதுப் பல்கலைகழகங்கள் இருப்பதாகவும் அதில் நியமனம் பெற போதுமான மலாய்க்காரர் அல்லாதோர் இருப்பதாக ஷாரிப் தெரிவித்தார்.
இதனிடையே, ஜி25 எனும் அரசின் முன்னாள் மேல்நிலை அரசு அதிகாரிகளின் அமைப்பு, நாட்டின் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களாக நியமிக்க, உலகளவில் நிர்ணயம் செய்யப்பட்ட தரக் கட்டுப்பாடு பின்பற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் பொதுப் பல்கலைக்கழங்களில் தகுதியான, திறமையான துணை வேந்தர்களை நியமிக்க அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
செனட்டுகள் தகுதி நிர்ணயத்தை உருவாக்கி, சிறந்த ஆளுமைத் திறன் உள்ள, கல்வியாளர்களைக் கவர்ந்திழுக்க வல்ல கல்விமானையே துணை வேந்தராக நியமிக்க அதிகாரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − 6 =