தகவல் பல்லூடகச் சட்டத்தில் திருத்தம் – அடுத்தாண்டு அமல்

0
PUTRAJAYA, 30 Mei — Menteri Komunikasi dan Multimedia Gobind Singh Deo ketika sidang media mengenai pertandingan bola sepak Piala Dunia FIFA 2018 yang akan disiarkan di Radio dan Televisyen Malaysia (RTM) secara langsung. –fotoBERNAMA (2018) HAK CIPTA TERPELIHARA

1988ஆம் ஆண்டு தகவல், பல்லூடகச் சட்டம் அடுத்தாண்டு திருத்தப்படும் என அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மக்களவையில் தெரிவித்தார்.
பக்காத்தான் கூட்டணியின் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொய்யான செய்திகளைப் பரப்பும் செயலானது இங்கு மட்டுமல்லாமல், சிங்கப்பூர், பிரிட்டன் போன்ற நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
2018ஆம் ஆண்டிலிருந்து 3,877 பொய்யான செய்திகளில் 78 விழுக்காட்டை சமூக ஊடகச் செய்தி நிறுவனங்கள் மீட்டுக் கொண்ட வேளையில், 1,564 அகப்பக்கங்களை முகநூல், டுவிட்டர், கூகுள் இன்ஸ்டாகிரோம் மற்றும் யூ டியூப் நிறுவனங்கள் அகற்றியுள்ளன.
கடந்தாண்டு அந்தச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இவ்வாண்டு அக்டோபர் 9ஆம் தேதி அச்சட்டத் திருத்த மசோதா இரண்டாவது வாசிப்புக்கு வந்தது.
தகவல், பல்லூடகச் சட்டம் தெளிவாக இல்லாமல், குழப்பம் நிறைந்திருப்பதால் அதனைத் திருத்த வேண்டுமென அறைகூவல் விடுக்கப்பட்டது.
அந்தச் சட்டமானது ஆபாசமான, ஒழுக்கமற்ற, பொய்யான, நிந்தனையான, அச்சுறுத்தும் நோக்கத்தோடு ஒருவரை ஆத்திரமூட்டி, நிந்தித்து, அச்சுறுத்தி, அவமானப்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது.அச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டாலும் தேசிய பாதுகாப்பு, பொது அமைதி மற்றும் இன விவகாரங்களைப் பாதுகாக்க அது மிகவும் தேவைப்படுவதாக கோபிந்த் சிங் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 9 =