டுசுன் டுரியான் தோட்டப் பாட்டாளிகள் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பெற்றனர்

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மின் வசதியின்றி அவதியுற்று வரும் டுசுன் டுரியான் தோட்டப் பாட்டாளிகள் ஜெனரேட்டர் மூலம் தங்கள் வீடுகளுக்கு மின்வசதிகளைப் பெற்றனர். தற்போது இங்கு வசித்து வரும் 23 குடும்ப ங்களுக்கு இதுவொரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார். நேற்று முன்தினம் மோரிப் சட்டமன்ற உறுப்பினர் துவான் ஹாஜி ஹஸ்னுல் காருடினுடன் தோட்ட நிலவரங்களைக் கண்டறிய நேரில் வருகை புரிந்த அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி யின் கவனத்திற்கு எழுத்துப் பூர்வமான அறிக்கை ஒன்று ம் வழங்க ப் பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் மாநில ஆட்சி க்குழுவில் இடம் பெற்றுள்ள புவான் ரோட்சியா இஸ்மாயில் இந்தத் தோட்டப் பிரச்சினைகளை முன்னெடுத்து ள்ளார். புறநகர் வீடமைப்புத் திட்டப் பிரிவில் அமர்ந்துள்ள இவர் இதற்கான பணிகளில் தற்சமயம் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே மின்சார வாரிய அதிகாரிகளுடன் நடத்தப் பட்ட பேச்சு வார்த்தை அடிப்படையில் தோட்ட வீடுகளுக்கு தனி மீட்டர் பொருத்தி மின்சாரம் வழங்கும் நடவடிக்கை களுக்கு சுமார் 40 ஆயிரம் வெள்ளி செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக டாக்டர் குணராஜ் தெரிவித்தார். இருப்பினும் தோட்டத்தை வாங்கியுள்ள பிஎன்பி நிறுவனம் இந்தத் கருத்திணக்கத்திற்கு இதுவரை சரியான முடிவைத் தெரிவிக்கவில்லை. அதனால் நாம் தோட்ட மக்களுக்காக மேற்கொண்டு வரும் இந்த த் திட்டம் சுமூகமாக நிறைவேற்றுவதில் இன்னும் சில காலம் பிடிக்கலாம் என்று அவர் கூறினார். எனினும் தோட்ட மக்கள் நலனுக்காக எங்கள் தொடர் நடவடிக்கையும் அதன் செயல் திட்டங்களும் தொடரும் என்றார். கோல லங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர் ஹரிதாஸ் ராமசாமி சமூக ஆர்வலர்கள் கருணாகரன் சத்திய மூர்த்தி தீபன் சுப்ரமணியம் மற்றும் தோட்ட மக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுநலச் சேவையாளர்கள் சிலர் எடுத்த முயற்சி யின் பலனாக ஜெனரேட்டரை ஏற்பாடு செய்து தோட்ட வீடுகளுக்கு தற்காலிக மின் வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளனர். இவர்களின் தொண்டூழியப் பணிகளை தாம் வெகுவாகப் பாராட்டுவதாக மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியுமான குணராஜ் தெரிவித்தார். மோரிப் சட்டமன்ற உறுப்பினர் துவான் ஹஸ்னுல் தீபாவளி ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டு களை பின்னர் தோட்டப் பாட்டாளிகளிடம் வழங்கினார். இது தோட்ட மக்களின் தீபத் திருநாள் சுமைகளை சற்று குறைக்கும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =