டிஜிட்டல் வழி உலகம் முழுவதும் உள்ள சிறு நிறுவனங்களை இணைக்க முடியும்

டிஜிட்டல் தளம் உலக முழுவதும் உள்ள சிறு, நடுத்தர நிறுவனங்களை இணைக்க உதவுகின்றது. இதன்வழி சிறு உரிமையாளர்களின் நிலைதன்மையை மேம்படுத்துவதோடு, சான்றிதழ் செலவுகளையும் இடைதரகர்களுக்கான செலவுகளையும் குறைக்க முடியும்.
உலகளாவிய செம்பனை எண்ணெய் விநியோகத்தில் 40 சதவீதம் சிறு உரிமையாளர்களிடமிருந்து வருகிறது என்றும், அவர்களில் இரண்டு சதவீதம் மட்டுமே சான்றிதழ் பெற்றுள்ளனர் என்றும் சம்வீன் குழும நிறுவனரான யு. ஆர் உன்னிதன் குறிப்பிட்டார்.
மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் மூன்று மில்லியன் சிறு உரிமையாளர்கள் உள்ளதாகவும், அவர்களில் சான்றிதழ் பெற்ற உரிமையாளர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது என்றும் அவர்கள் உலகளாவிய விநியோகத்தில் இணையவதை தீவிரமாக கவனிக்க வேண்டும் என்றும் யு. ஆர் உன்னிதன் 2020ஆம் ஆண்டின் மெய்நிகர் செம்பனை எண்ணெய் மாநாட்டில் கலந்து கொண்டபோது இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், சிறிய உரிமையாளர்கள் குறைந்த விலையில் விநியோகம் செய்வதற்கும் டிஜிட்டல் உதவுகின்றது. டிஜிட்டல் தளம் சிறு உரிமையாளர்களை உலகளாவிய நிலையில் வாங்குபவர்களுடன் நேரடியாக இணைக்கவும், இந்த நிறுவனங்களின் நீடித்த ஊக்கத்தொகைகளை மேம்படுத்தவும், ஒழுங்குமுறை மேம்பாடுகள், அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து தங்கள் விற்பனையை மேம்படுத்திக் கொள்ளவும் உதவுகின்றது என்று உன்னிதன் மேலும் கூறினார்.
ஓர் அறிக்கையை மேற்கோளிட்டு, 16 ஆண்டுகளுக்கு முன்பு, சான்றிதழ் அறிமுகபடுத்தபட்டதிலிருந்து, சுமார் 8012 சிறு உரிமையாளர்களும் 152284 நடுத்தர உரிமையாளர்களும் மட்டுமே ஆர்எஸ்பிஓ சான்றிதழ் பெற்றவர்கள் என்று உன்னிதன் கூறினார். எம்எஸ்பிஓவைப் பொறுத்தவரை, 54,609 சான்றளிக்கப்பட்ட சிறு உரிமையாளர்கள் உள்ளனர் என்றும், 231,576 நடுத்தர நிறுவன உரிமையாளர்கள் சான்றிதழ் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
மலேசியாவின் பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பற்றி உன்னிதன் கூறுகையில், கோவிட்-19 காலகட்டத்தில் கச்சா எண்ணெய் மற்றும் செம்பனை எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதோடு, மேலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 2020 ஆம் ஆண்டில் 3.4 சதவீதம் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதோடு, 2021ஆம் ஆண்டில் ஆறு சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =