டிஜிட்டல் பொருளாதாரத்தால் புதிய தொழில்துறைகள் மேம்படும் சாத்தியம் உள்ளது

டிஜிட்டல் பொருளாதாரம் நம் அனைவரின் தினசரி வாழ்க்கையிலும் முக்கிய அம்சமாக இருப்பதால் அது ஆசியான் வட்டாரத்தில் புதிய தொழில்துறைகளை மேம்படுத்தும் சாத்தியம் கொண்டுள்ளதாகத் தொடர்புப் பல்லூடக அமைச்சர், டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார். சுகாதாரப் பராமரிப்புச் சேவைத் தொடங்கி வாங்குதல் விற்றல் வரை இதற்கு முன் இருந்த சேவைகள் அனைத்தையும் கோவிட் தொற்று டிஜிட்டல்மயமாக்கி விட்டது. தனது டிஜிட்டல் சேவைத் தொடர்ச்சியை அதிகரித்து நாட்டை 5ஜி தொழில்நுட்பத்திற்குக் கொண்டு செல்ல தேசிய டிஜிட்டல் கட்டமைப்புத் திட்டத்தை மலேசியா அறிமுகப்படுத்தியது. இந்த 5ஜி தொழில் நுட்பத்தைக் கட்டம் கட்டமாகப் பயன்படுத்துவதன் மூலம் மலேசியாவைப் புத்தாக்க முனையமாக மாற்றி உள்நாட்டு மற்றும் அனைத்துலக முதலீட்டாளர்களிடமிருந்து வெ.7,000 கோடி மதிப்புள்ள முதலீட்டை டிஜிட்டல் துறைக்குக் கவரலாம். இது 2021-2025 கால கட்டத்தில் 100,000 புதிய வேலை வாய்ப்புகளை புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க வகை செய்யும் என்று 2021ஆம் ஆண்டு உலக இணைய உச்சநிலை மாநாட்டில் உரையற்றிய போது கெதேரே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அனுவார் மூசா குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 2 =