டிங்கியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நெகிரி செம்பிலானில் டிங்கி யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி முதல் 27 ஜூன் வரைக்கும் 1498 பேர் டிங்கியால் பாதிப்படைந்து உள்ள னர் என்று பதிவாகியுள்ள வேளையில் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 1,228 பேர் பாதிப்படைந்து உள்ளனர் என்று மாநில சுகாதார சுற்றுச்சூழல் கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவகார செயற்குழு தலைவர் எஸ். வீரப்பன் கூறினார்.
கடந்த 21 ஜூன் முதல் 27 ஜூன் வரைக்கும் 27 பேர் டிங்கி பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்றார் வீரப்பன். சிரம்பானில் 1263 பேரும் ரெம்பாவில் 56 பேரும் போர்ட்டிக் சனில் 55 பேரும் ஜெம்போலில் 43 பேரும் தம்பினில் 43 பேரும் கோல பிலாஹ்வில் 19 பேருக்கு ஜெலுபு வில் 19 பேரும் டிங்கியால் பாதிப் படைந்தவர்கள் ஆவர். டிங்கியால் மரணம் அடைந்த வர்களின் எண்ணிக்கை 6 ஆக வும் மரண விகிதம் 0.4 சதவீதம் ஆகவும் பதிவாகி உள்ளது.
டிங்கி சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வரும் 30 இடங்கள் இன்னும் சிரம்பானில் உள்ளன.
மீட்சிக்கான நடமாட்ட கட்டுப் பாடு ஆணை அமலில் உள்ள வேளையிலும் ஏடிஸ் கொசுக் கள் இனவிருத்தி செய்யும் இடங் களை துப்புரவு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =