டிஎன்பி ஏற்பாட்டில் பொரோத்தோவுக்கு இலவச வீடு

பெக்கான் ஜெல்லாய் கிராமத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் வசதி குறைந்த பொரோத்தோ அச்சுதாவிற்கு பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் முயற்சியிலும் டிஎன்பி ஏற்பாட்டிலும் 50,000 வெள்ளி செலவில் வீடு கட்டப்படுகிறது.
இவருக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக செனாலிங் சட்டமன்ற பக்காத்தான் ஹராப்பான் ஒருங்கிணைப்பாளர் துவான் ஹாஜி ராஸ், ஜெரம் பாடாங் சட்டமன்ற பக்காத்தான் ஹராப்பான் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி முஸ்லியாடி, கம்போங் தெமெரிஸ் கிராமத் தலைவர் சஹாரி ஹசிம், பெக்கான் ஜெல்லாய் கிராமத் தலைவர் கு.ராஜகுமார் ஆகியோர் முயற்சி எடுத்துள்ளனர்.
வீடு கட்டும் வேலைகள் 50 விழுக்காடு முடிவடைந்து விட்டன. வீட்டின் கட்டுமான வேலைகளைப் பார்வையிட்ட இந்தத் தலைவர்கள், டிஎன்பிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 10 =