டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இலங்கை அமைச்சரைச் சந்தித்தார்

0

இலங்கைக்கு மலேசிய மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது பேராளர் குழுவுடன் 3 நாட்கள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ளார்.
ம.இ.கா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் பிப்ரவரி 11 செவ்வாய்க்கிழமை பயணமானார்.
இலங்கையின் தகவல், ஊடகம், உயர்கல்வி, தொழில்
நுட்ப அமைச்சர் பந்துலா குணவர்த்தனேவுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பின் போது அவர் பல விவகாரங்கள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடினார்.
அதன்பிறகு நீதி, மனித உரிமை, சட்டத்துறை அமைச்சர் நிமல் ஸ்ரீ பாலா டி சில்வாவை மரியாதை நிமித்தம் சந்தித்தார். மேலும் மகளிர், குழந்தைகள், சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதார, மருத்துவ சேவை அமைச்சர் திருமதி தேவி வன்னியராச்சியையும் மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார்.
டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனோடு ம.இ.கா. தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், செனட்டர் டத்தோ ஆனந்தன், எம்.ஐ.இ.டி. தலைமை நிர்வாக அதிகாரி மும்தாஜ், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக அதி காரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here