டாக்ஸி ஓட்டுநர்களின் வருவாயை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படும்

மீட்பு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலகட்டத்தில் டாக்ஸி ஓட்டுனர்களின் வருவாயை அதிகரிக்க ஞஐஊமுnழுடீ பயன்பாட்டு விநியோக சேவைகள் வழங்கப்படுகின்றது.
ஞஐஊமுnழுடீ நிர்வாக இயக்குனர் வலேரி சான் கூறுகையில், மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் காரணமாக டாக்ஸி ஓட்டுநர்கள் தங்களின் வருவாயை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
வாடிக்கையாளர்கள் இந்த சேவையின் வழி மளிகை பொருள்கள் அல்லது அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட பணி நெறிமுறைகளை கடைபிடிப்பதோடு பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியே சென்று பொருட்களை வாங்க இந்த சேவை உதவுகின்றது.
இந்த புதிய சேவையானது டாக்ஸி ஓட்டுநர்கள் தங்களின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள உதவுவதன் மூலம் மீண்டும் அவர்களின் வணிகத்தை மீட்டெடுக்க உதவுகின்றது.
“இந்த சேவையை பெற நினைக்கும் டாக்ஸி ஓட்டுநர்கள் சரியான முறையில் முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு டாக்ஸி ஓட்டுநர் இந்த சேவையின் கீழ் விண்ணப்பம் செய்யும் போது சரியான தகவல்களை மட்டுமே தர வேண்டும்” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கோவிட்-19 பரவலைத் தடுக்க உதவும் வகையில் கடை உரிமையாளர்கள் பணமில்லா கட்டண முறையை ஏற்றுக்கொண்டதாக சான் கூறினார்.
நாங்கள் எங்கள் ஓட்டுநர்கள் அனைவரையும் கடமையில் இருக்கும்போது முகமூடி அணிந்து கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
“மேலும் அவர்களின் வாகனங்களில் கை சுத்திகரிப்பான்களை வைத்திருக்குமாறும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.
“மேலும், டாக்ஸியில் சவாரி செய்யும் போது முகமூடி அணியுமாறு பயணிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்றார் அவர்.
2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஞஐஊமுnழுடீ பயன்பாடு கோலாலம்பூரில் சுமார் 10,000 டாக்ஸி ஓட்டுநர்களுக்கு இணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இச்சேவையின் மூலம் பல டாக்ஸி ஓட்டுநர்கள் அவர்களின் வாழ்வாதார வருவாயையும் அதிகரித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 15 =