டாக்டர் மகாதீருக்கு பக்காத்தான் ஹராப்பான் ஆதரவு

0

பக்காத்தான் ஆதரவோடு  டாக்டர் மகாதீர் முகமட்  பிரதமர் பதவிக்கு வேட்பாளராக  போட்டியிடுவது குறித்த அறிவிப்பை  அந்த கூட்டணி இன்று உறுதிப்படுத்தியது. மேலும்  கொல்லைப்புற அரசாங்கத்தை அமைப்பதற்கு முயற்சியை மேற்கொண்டுவரும் தரப்பினரையும் அது சாடியது

உண்மைக்கான போராட்டத்தை  நிலைநிறுத்துவதற்கும்  அதனை தற்காப்பதற்கும்   பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு முழுமையான ஆதரவை வழங்கப்போவதாகவும் பக்காத்தான் ஹரப்பான் தெரிவித்தது.

இதனிடையே  பிரதமர் வேட்பாளருக்கு  பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மொஹிடின்  யாசினுக்கு  ஆதரவு வழங்கிய  பெர்சத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் தாம் இடம்பெறவில்லையென  அக்கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட காணோளயில் தெரிவித்திருந்தார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆவணத்தில் தாம் கையெழுத்திடவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

தேசிய முன்னணியுடனான   புதிய அரசாங்கத்திற்கு  ஆதரவு தெரிவிக்கக்கூடாது என டாக்டர் மகாதீரை கேட்டுக்கொள்ளும்  கடைசி முயற்சியாக  பக்காத்தான் ஹரப்பான் தலைவர்களான    அன்வார் இப்ராஹிம் , லிம் கிட் சியாங் மற்றும முகமட் சாபு  ஆகியோர் சந்திப்பு நடத்தியதாக நேற்று இரவு முதல்  ஆருடங்கள் வெளியாகின.

தேசிய முன்னணி தலைவர்கள்   மொஹிடினுக்கான ஆதரவை நேற்று தெரிவித்தனர்.  பக்காத்தான்  ஹராப்பான்   அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் முட்டுக்கட்டையை அகற்றும்  அறிகுறியாக அவர்களது அந்த ஆதரவு அமைந்தது.

இதனிடையே   அனைதது நடவடிக்கைகள் மற்றும்   கட்சியின்  இலக்கு அனைத்தும்   கட்சியின் அவைத்தலைவர் என்ற டாக்டர் மகாதீரின் நடவடிக்கைக்கு ஏற்பவே இருக்கும் என   பெர்சத்து கட்சியின்   தலைமைச் செயலாளர்  மர்சுகி  யஹ்யா   கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 4 =