டத்தோ ஸ்ரீ டாக்டர் பெரியண்ணன் சுழற்கிண்ணம் புட்சால்

0

பெஸ்தாரி ஜெயா பொற்கோயில் மற்றும் சிலாங்கூர் மாநில இந்திய ஆசிரியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கானப் புட்சால் போட்டி முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 100 சிலாங்கூர் மாநில ஆசிரியர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். டத்தோ ஸ்ரீ டாக்டர் பெரியண்ணனின் முழு ஆதரவிலும் முழு செலவிலும் நடைபெற்ற இப்போட்டியில் கோலசிலாங்கூர் மாவட்டக் குழு முதல் நிலையில் வெற்றி பெற்றது. அவர்கள் ரொக்கம் ரி.ம. 500, சுழற்கிண்ணம், பதக்கம் நற்சான்றிதழ் ஆகியவற்றைத் தட்டிச் சென்றனர்.
டத்தோ ஸ்ரீ டாக்டர் பெரியண்ணன் இந்நிகழ்வினை தொடங்கி வைத்து, பின்னர் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கி சிறப்பித்தார். மாநில கல்வி இலாகாவின் பாலர் பள்ளி தமிழ்ப்பள்ளிகளுக்கான கல்வி உதவி இயக்குநர் மணிசேகர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றச் செயலாளர் எஸ்.எஸ். பாண்டியன் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்புச் செய்தனர்.
இப்போட்டியில் கோலசிலங்கூர் மாவட்டத்திலிருந்து ஆ.சுகுமாறன் ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் சிறந்த கோல்காவலர் கிண்ணத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டி இனிவரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடைபெற தனது ஆதரவை வழங்குவதாக டத்தோ ஸ்ரீ டாக்டர் பெரியண்ணன் உறுதிபடுத்தியுள்ளார்.
இதனைத் தவிர்த்து, அடுத்தாண்டு முதல் மாணவர்களுக்கான டத்தோ ஸ்ரீ டாக்டர் பெரியண்ணன் சுழற்கிண்ணம் கால்பந்து போட்டிக்கானக் கிண்ணதையும் இந்நிகழ்வில் அறிமுகம் செய்து வைதார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − six =