டத்தோ பத்மாவின் 84ஆவது பிறந்தநாள் நினைவலைகள் மறைந்து 20 ஆண்டுகள் நிறைவு

இன்று டத்தோ கு. பத்மநாபனின் 84ஆவது பிறந்த நாள். நேற்றோடு அவர் மறைந்து 20 ஆண்டுகள் நிறைவடை கிறது. பிறந்த நாளைக்கு முதல் நாள் மறைந்த அந்த மாமனிதர் நெகிரி செம்பிலான், லிங்கியின் புக்கிட் பெர்டாம் தோட்டத்தில் பிறந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறையில் முதுநிலை பட்டத்தைப் பெற்றார்.
1959ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதலிடம் பெற்ற இளங்கலை பட்டதாரிகளில் ஒருவ ராக இருந்தார்.
அரசியலில் இறங் குவதற்கு முன், 1960 முதல் தொழி லாளர் மற்றும் மனிதவள அமைச்ச கத்தின் உதவி செயலாளராகவும், சமூக பொருளாதார இயக்குநராகவும் பணியாற்றினார். 1968 முதல் பிரதமர் துறையில் திட்டமிடல் பிரிவில் பணியாற்றினார். (ஈபியு) 1974இல் தெலுக் கெமாங் நாடாளு மன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நாட்டில் பல சமூக அமைப்பு களின் நடவடிக்கைக்கு துணையாக இருந்த டத்தோ பத்மா மலேசிய திராவிட கழக கட்டடம் வாங்குவ தற்கு பெரும் துணையாக இருந்துள்ளார்.
அப்போதைய தலைவர் திருச்சுடர் கே.ஆர். இராமசாமியுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.
அரசியல் வாழ்க்கை
பத்மநாபன் ஆரம்பத்தில் மலேசிய இந்திய காங்கிரசில் நுழையவும் துன் அப்துல் ரசாக் ஊக்கு வித்தார்.
அவர் ஒரு மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் தனது திறனை யும் கல்வியையும் விலைமதிப்பற்ற தாகக் கண்டார். கட்சியில் புதிய ரத்தத்தை உட்செலுத்துவதற்கான தனது செயல்முறையின் ஒரு பகுதி யாக அப்போதைய தலைவரான டான்ஸ்ரீ வி. மணிக்கவாசகம் அவர் களால் சேர்க்கப்பட்டார்.
தமிழ் மலர் வாரிய தலைவர் ஓம்ஸ் தியாகராஜனின் நிறுவன பெயரை கொண்டே அவரை ராஜன் என்று அழைத்ததை ஓம்ஸ் என்று அழைத்தவர் டத்தோ பத்மாவே.
1976 முதல் ஐந்து ஆண்டுகள் துணை மனிதவள அமைச்சராக இருந்தார். பத்மநாபன் 1981 முதல் ஏழு ஆண்டுகள் துணை சுகாதார அமைச்சராக இருந்தார்.
கடைசியாக அரசாங்கத்தில் துணை மனித வள அமைச்சராக 1989 ஜூன் முதல் 1990 அக்டோபர் வரை பணியாறறினார்.
இன்று அவர் பிறந்த நாளாக இருந்த போதிலும் அவர் நம்மை விட்டு மறைந்து 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.
அவரது புதல்வர் பிரசாந்த் அவரை பற்றி குறிப்பிடுகையில் அவர் வாழ்ந்த காலத்தின் அவரைப் பற்றிய நினைவுகள் நெஞ்சைவிட்டு அகலவில்லை. நல்ல விளையாட்டு ஆர்வலராக இருந்த அவர் அதனைப் போலவே நல்ல உணவுகளை தேர்வு செய்வ திலும் அவரை மிஞ்ச முடியாது.
பத்மநாபன் என்ற அவரின் பெயரை ‘பெட்’ என்று சுருக்கி அழைக்கும் அவரது நண்பர்களின் அந்த பெயர் எங்களுக்கு என்றும் ஒலித்துக்கொண்டு இருக்கும் என அவர் கூறினார்.
ஒரு சாதாரண தோட்ட தொழி லாளியின் மகனாக பிறந்து நாட்டின் உச்ச நிலையை அடைந்த அவரின் சாதனைகள் எங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு கம்பிரமான மனிதரின் அந்த பாசம் அன்பு எங்களிடமிருந்து பிரிந்து 20 ஆண்டுகள் ஆகி விட்டன.
அந்த நினைவுகளுடன் என்றும் நாங்கள் இருப்போம் என அவரது புதல்வர் தெரிவித்தார்.
அருள் மாமணி என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளையின் செல்லப் பிள்ளையாக இருந்த டத்தோ பத்மாவின் நினைவுகளை என்றும் தமிழ் மலர் கொண்டு இருக்கும்.
மீண்டும் தமிழ்மலர் வெளியிடுவதற் கான உரிமம் இவரது பிறந்த நாளான இன்றைய தினத்தில் கிடைத்ததை இங்கே மகிழ்ச்சியுடன் நினைவு கூருகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =