டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்திக் கொலை; தம்பி என்ற இந்திய இளைஞனுக்கு போலீஸ் வலைவீச்சு

0

தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஆர். ஆறுமுகம் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விக்னேஸ்வரன் நாகேந்திரன் அல்லது தம்பி அல்லது வினோத் (வயது 28) என்ற இளைஞனுக்கு போலீஸ் வலைவீசி வருகிறது.
போலீஸாரால் வலைவீசித் தேடப்படும் அந்த இந்திய இளைஞன் ரவாங், 587-144 நியூ கிரீன் பார்க் என்ற முகவரியில் தங்கியுள்ளதாக சிலாங்கூர் குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஃபாட்ஸில் அமாட் கூறினார்.சம்பந்தப்பட்ட இளைஞர் குறித்து தகவல் தெரிந்தால் 017-2251403 என்ற தொலைபேசி எண்ணில் பாருக் பாக்ஸான் முகமட் நோர்டின் என்ற விசாரணை அதிகாரியைத் தொடர்பு கொள்ளும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே மற்றொரு இளைஞனான ஷேக் இஸ்மாயில் ஷேக் ஹஸான் என்ற இளைஞனை நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு கோலகுபுபாரு புக்கிட் செந்தோசாவில் போலீஸ் கைது செய்ததாக அவர் சொன்னார்.
டத்தோஸ்ரீ ஆறுமுகம் கொலை தொடர்பாக இதுவரை 3 இந்திய இளைஞர்கள், 3 மலாய்க் காரர்கள் மற்றும் ஒரு வங்காள தேசப் பிரஜையை விசாரணைக் காக போலீஸ் கைது செய்துள்ளது.
கடந்த ஜூன் 10ஆம் தேதி பண்டார் ஸ்ரீ டாமன்சாராவில் உள்ள ஒரு பார்க்கில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 8 =