டத்தோஸ்ரீ அன்வார் பிரதமராக குளுவாங் மக்கள் நீதிக் கட்சி முழுமையான ஆதரவு

மக்கள் நீதிக் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் 8வது பிரதமராக தேர்வு பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அவரின் தலைமைத்துவத்திற்கு தாங்கள் முழுமையான ஆதரவினை வழங்குவதாக மக்கள் நீதிக் கட்சி குளுவாங் தொகுதி துணைத் தலைவர் காளிதாஸ் சந்தரஹாசன், உதவித் தலைவர் நல்லதம்பி தியாகராஜன் மற்றும் செயலவை உறுப்பினர் மதிவாணன் சிவபெருமாள் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளனர்.

அவரின் தலைமைத்துவத்தில் நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் எனும் நம்பிக்கையில் எங்களைப் போன்ற இளைஞர்கள் பலரும் மக்கள் நீதிக் கட்சியில் இணைந்துள்ளனர்.

அவரும் அவரின் குடும்பத்தினரும் தங்களின் பதவிகளை இழந்து பின்னரும் மக்களோடு மக்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். உருமாற்றுச் சிந்தனைகளை கொண்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக தேர்வு பெறுவதின் வழி நாட்டின் மறுமலர்ச்சிக்கு வித்திடுவார் என்பது திண்ணம் என அவர்கள் தங்களின் நம்பிக்கையை வெளிப் படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =